சென்னை கோலவிழி அம்மன்

சென்னை மாநகரில் மைலாப்பூரில் கோலவிழி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. சோழர்கள் காலத்தை சார்ந்தது. இங்கு அமைந்துள்ள கலைநயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் சிலை மிகவும் பழமையும் சிறப்பும் வாய்ந்தது. சென்னையின் காவல் தெய்வமாக , மக்களை காத்து நிற்கிறாள் .சிறப்பு : இக்கோவிலில் இருக்கும் அம்மனின் சன்னிதியில் உருவமாக இருக்கும் உக்ரரூபம் கொண்ட அம்மனுக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும். மேலே இருக்கும் சாந்த ஸ்வரூபமான […]

ஆடி மாதமும் அம்மன் வழிபாடும்

ஆடி மாதத்தில் அம்மனை தரிசிப்பது விசேஷமானது. அம்மன் தனியே மூலதெய்வமாக கொலுவிருக்கும் கோவில்களில் இந்த மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.அதே போல சிவன் கோவில்களில் தனி சந்நதியில் வீற்றிருக்கக்கூடிய துர்க்கை அம்மனுக்கும் பிரத்யேக ஆராதனைகள் செய்விக்கப்படுகின்றன.அம்மன் காவல் தெய்வமாக அருள்பாலிக்கும் கிராமப்புறங்களில் பல்வேறு வகையான நேர்த்திக் கடன்களை மேற்கொண்டு அம்பிகையை மகிழ்விக்கிறார்கள்.அந்த வகையில் இங்கே சில அம்மன்களை தரிசிப்போம்.சாமுண்டீஸ்வரிவலக்கரங்களில் சூலம்,கத்தி,சக்தி, சக்கரம்,அம்பு, சங்கம்,வஜ்ரம், அபயம்,உடுக்கை, சிறிய கத்தி.இடதுகரங்களில் நாகம்,பாசம், கேடயம்,கோடரி, அங்குசம்,வில்,மணி, கொடி,கண்ணாடி ஆகியன ஏந்தியிருக்கிறாள்.மகிஷாசுரன்தன் தலை […]

குரோம்பேட்டை பத்மநாப நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன் சிறப்பு வளையல் அலங்காரத்தில் காட்சி

குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஆடிவார முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாதாரணை செய்யப்பட்டது. மாலையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ கருமாரியம்மன் வளையலால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆனி மாத பௌர்ணமி முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

குரோம்பேட்டை காந்திஜி நகர் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்.