அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் காயமடைந்தனர்.

அடுத்த நீர்மூழ்கி கப்பலை தென் கொரியாவுக்கு அனுப்பிய அமெரிக்கா

தென் கொரியா – வட கொரியா இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவம் தனது 2வது நீர்மூழ்கி போர்க் கப்பலை தென் கொரியாவுக்கு அனுப்பியுள்ளது. ‘யுஎஸ்எஸ் அனாபோலிஸ்’ என்றழைக்கப்படும் இந்தக் கப்பல், தென் கொரியாவின் தெற்கு தீவான ஜெஜூவில் உள்ள கடற்படை தளத்தை அடைந்துள்ளது. இரு நாடுகளும் இணைந்து நட்பை பறைசாற்றும் வகையில், அணிவகுப்பு நடத்தவுள்ளன.

அமெரிக்கா: பீச்சில் நீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற சென்ற இந்தியர் பலி

அமெரிக்காவில் பீச்சில் குளிக்க சென்று நீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற சென்ற இந்தியர் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது.புளோரிடா, ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் வசித்து வந்தவர் பொட்டி வெங்கட ராஜேஷ் குமார் (வயது 44). அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் அவர் சென்று உள்ளார். இதன்பின்னர், கடந்த மே மாதத்தில் அவரது மனைவி, குழந்தைகள் அமெரிக்காவுக்கு சென்று உள்ளனர். அமெரிக்காவின் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் ராஜேஷ் வேலை செய்து வந்து உள்ளார். […]