நடுவானில் பெயர்ந்து விழுந்த விமானத்தின் கதவு: பயணிகள் அதிர்ச்சி!

அமெரிக்காவில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் கதவு பெயர்ந்து விழுந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.  அமெரிக்காவில் 177 பயணிகளுடன் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் ரக விமானம் ஒன்று போர்ட்லேண்டில் இருந்து ஒன்டாரியோ நோக்கி நேற்று புறப்பட்டது. விமானம் 16,000 அடி உயரத்தில் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, அதன் கதவு மற்றும் இருக்கை திடீரென பெயர்ந்து விழுந்தது.  இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் விமானம் போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த பயணிகள் […]

அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து

வாஷிங்டன்: அமெரிக்காவில் 24 வயதான வருண் என்ற இந்திய மாணவரை, அந்நாட்டு வாலிபர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த வருண், உயிர் பிழைப்பது கடினம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள வால்பரைசோ நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் வருண் கத்தியால் தாக்கப்பட்டார். கத்தியால் குத்திய ஜோர்டான் ஆண்ட்ராட்(24) என்ற அமெரிக்க வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பயங்கர ஆயுதத்தை பயன்படுத்தியது மற்றும் கொலை முயற்சி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு […]

போர் எதிரொலி – 2வது முறையாக இஸ்ரேல் செல்கிறார் அமெரிக்க வெளியுறவு மந்திரி

வாஷிங்டன்:இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நாளை மறுதினம் […]

போரால் உருக்குலைந்துள்ள காசாவில் மனிதாபிமான உதவிகள் வழங்க அமெரிக்கா – இஸ்ரேல் ஒப்புதல்

காசாவிற்குள் பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது குறித்து அமெரிக்கா – இஸ்ரேல் ஆலோசனை மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுப்ப ஒப்புக்கொண்ட இஸ்ரேல் நிலைப்பாட்டை வரவேற்கிறோம்-அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்; 9 அமெரிக்கர்கள் பலி

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 9 பேர் பலியாகி உள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்து உள்ளது.வாஷிங்டன் டி.சி., இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, அதிரடியாக தாக்குதல்களை நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர். இஸ்ரேலும், படைகளை குவித்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த […]

அமெரிக்க பேராசிரியர் கிளாடியாவுக்கு பொருளாதார நோபல் பரிசு!

ஸ்டாக்ஹோம்: நடப்பு ஆண்டுக்கான பொருளாதார அறிவியல் நோபல் பரிசு, அமெரிக்க பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. “தொழிலாளர் சந்தையில் (labour market) பெண்களின் பங்குகள் பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக” கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது. 1946-ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த க்ளாடியா கோல்டின், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். பெண்களின் வருவாய் மற்றும் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கு குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளார். இவரது ஆராய்ச்சி 200 […]