காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிலை அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டது குறித்து சிலை தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரூ.8 கோடி மதிப்பிலான சோமஸ்கந்தர் சிலையை மீட்டு கொண்டு வர நடவடிக்கையை சிலை தடுப்புப் பிரிவு மேற்கொண்டுள்ளது

டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொலை செய்ய மீண்டும் முயற்சி. புளோரிடாவில் கோல்ப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக் கொண்டு இருந்தபோது, மைதானத்தின் சுவரின் மீது துப்பாக்கியை வைத்து சுடமுயற்சி. துப்பாக்கியால் சுட்ட நபரை கைது செய்து விசாரிக்கும் பாதுகாப்புப்படை. ஏற்கெனவே ஜூலை 13ஆம் தேதி பென்சில்வேனியாவில் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு.

அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ விமானநிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்காவில் ரூ.7156 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

ஜபில் ரூ.2000 கோடி ஒப்பந்தம் செய்த தமிழக அரசு

தமிழகத்தில் தொழில் தொடங்க ஜபில்(JABIL), ராக்வெல் (ROCKWELL) ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. திருச்சியில் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான ஜபில் ரூ.2000 கோடி முதலீடு – 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். காஞ்சிபுரத்தில் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் ரூ.666 கோடி முதலீடு – 365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் அமெரிக்கா நாட்டின் சிகாகோவில்

ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 666 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கானபுரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின்போது, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயல் திரு.வி.அருண்ராய், இ.ஆ.ப., தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு.வே.விஷ்ணு, இ.ஆ.ப., ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு.பிளேக் மோரெட், […]

சிகாகோவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், 3 நிறுவனங்களுடன் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

செங்கல்பட்டில் ரூ.500 கோடியில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையம் விரிவாக்கத்திற்கு ஒப்பந்தம் காஞ்சிபுரத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் விஷய் பிரிஷிஷன் நிறுவனத்தின் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் உற்பத்தி மையத்தை நிறுவ ஒப்பந்தம் சென்னை மற்றும் கோவையில் ரூ.250 கோடியில் விஸ்டியன் நிறுவனத்தின் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அமெரிக்கா நாட்டின் சிகாகோ நகரில்

நைக்கி நிறுவனத்தின் தலைமை வழங்கல் அலுவலர் (Chief Supply Chain Officer) திரு.வெங்கடேஷ் அழகிரிசாமி மற்றும் உயர் அலுவலகர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் நைக்கி நிறுவனத்தின் தோல் அல்லாத காவணிகளின் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், ஆடைகள் உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது, சென்னையின் தயாரிப்பு உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு மையத்தை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் […]

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அமெரிக்கா நாட்டிற்கு சென்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்அவர்களுக்கு

சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்திய துணைத் தூதர் திரு.ஸ்ரீகர்ரெட்டி அவர்கள், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்கள் மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அமெரிக்கா நாட்டிற்கு சென்றுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு

சான்பிரான்ஸ்சிஸ்கோ விமான நிலையத்தில் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்திய துணைத் தூதர் திரு.ஸ்ரீகர் ரெட்டி அவர்கள், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்கள் மற்றும்அமெரிக்கா வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.