அமெரிக்கர்களுக்கு தலா ரூ.1.77 லட்சம்! – டிரம்ப் திட்டம்!!
அமெரிக்காவில் வாழும் அதிக வருவாய் உள்ளவர்களைத் தவிர்த்து, மற்ற அனைவருக்கும் தலா 2 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். பல்வேறு உலக நாடுகளுக்கும் அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி விதிப்புகள் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய் வரி வருவாயைப் பகிர்ந்து, அமெரிக்க மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
அணு ஆயுதப் போட்டியில் அமெரிக்கா ,ரஷ்யா
ரஷ்யா வடகொரியா, பாகிஸ்தான் சீனா ஆகிய நாடுகள் மறைமுகமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன எனவே அமெரிக்காவும் அணு ஆயுத சோதனை நடத்தும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்தினால் ரஷ்யாவும் மீண்டும் சோதனைகளை தொடங்கும். அதற்கான வரைவுத் திட்டங்களை தயார் செய்வோம் என்று ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார் இதனால் அணு ஆயுதப் போட்டி ஏற்பட்டுள்ளது
உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு விமானம் தயாரிப்பு
உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய போர் விமானத்தை உருவாக்கியுள்ளது அமெரிக்காவின் தனியார் நிறுவனம். இந்த ஃபைட்டர் ஜெட், விமானி இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது. இதற்கு ரன்வே தேவையில்லை, நிலத்திலிருந்து நேரடியாக புறப்படும் என கூறப்படுகிறது.
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகில் திடீர் தீ
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரை இஸ்ரேல் பிரதமர் நேதன் யாகு சந்திப்பதற்கு முன்பு வெள்ளை மாளிகை வெளியே நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க உளவுப் படையின் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது.
அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப நல்ல வாய்ப்பு: சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து
சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: பிரிவினையின் போது தங்கள் குடும்பங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்தியாவுக்கு எப்படி வரநேர்ந்தது என்பது குறித்து சிந்தி நண்பர்களிடம் ஏராளமான கதைகளை கேட்டிருக்கிறேன். இந்தியாவில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்பி சிறப்புடன் உள்ளனர். அதேபோன்று, விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில் வல்லுநர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்புவதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் செழித்து வளர்ந்துள்ள சிந்தி சமூகத்தினரைப் போல […]
இந்தியா- அமெரிக்கா வர்த்தக பேச்சு தொடக்கம்.
இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று மீண்டும் தொடங்கியது. அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினருடன் மத்திய வர்த்தகத் துறை செயலர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது ஆக்கப்பூர்வமாக இருந்ததாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரைவில் நடைபெற உள்ள அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தொடங்கிய ஆபத்தான போர் – ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதல் மூலம் ஆபத்தான போரை தொடங்கியுள்ளது. இது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் தெரிவித்துள்ளார் அவர் உடனடியாக ரசிய அதிபர் புதினை சந்திக்கவும் புறப்பட்டு செல்கிறார்.அமெரிக்க தாக்குதல் மூலம் இதுவரை இஸ்ரேலுக்கு பின்னணியில் இருந்தது அமெரிக்கா தான் என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் மிரட்டல் -பெட்ரோல் விலை உயரும்
அமெரிக்க தாக்குதலால் கோபம் அடைந்துள்ள ஈரான் உலகளவில் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோமுஸ் ஜலசந்தியை மூடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் போன்ற பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் எல்லாம் ஈரான் மற்றும் ஓமன் இடையே உள்ள குறுகலான ஹோமுஸ் ஜலந்தியைத்தான் பயன்படுத்துகின்றன உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் 20 சதவீதம் இந்த வழித்தடம் வழியாகத்தான் நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு 18 மில்லியன் பேரல் […]
அமெரிக்க அரசில் இருந்து எலான் மஸ்க் விலகல்
வாஷிங்டன்: அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார். “சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும் நிலையில், தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் வாய்ப்பை அளித்த அதிபர் டொனல்டுக்கு ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்” என மஸ்க் தெரிவித்துள்ளார். இதை வெள்ளை மாளிகை அதிகாரி […]
இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசும் ஈரான்.பதுங்கு குழிகளில் இஸ்ரேலிய மக்கள் இஸ்ரேல் ஜாப்பா நகரில் தீவிரவாதிகள் தாக்குதல்

இஸ்ரேலுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவு இஸ்ரேலை குறிவைத்து ஏவப்படும் ஏவுகணைகளை தகர்க்குமாறு அமெரிக்க படைகளுக்கு பைடன் உத்தரவு மத்திய கிழக்கில் உஷார் நிலையில் அமெரிக்க படைகள். இஸ்ரேலில் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல். இஸ்ரேல் அரசாங்கம் சொல்லும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற கோரிக்கை24 மணி நேர உதவி எண்களை டெல்-அவிவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு972-547520711, 972-543278392 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு. […]