தாம்பரம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில்

மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறின்றி சாலையோர வியாபாரம் மேற்கொள்வது குறித்த கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறைஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டலம், வார்டு-03க்குட்பட்ட கன்னியம்மன் கோவில் தெரு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆர். அழகுமீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர் த.ஞானவேல், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
ஆய்வு கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது

தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் துணை ஆணையர் செந்தில்முருகன், நகர்நல அலுவலர் டாக்டர் அருள்ஆனந்த், உதவி ஆணையர் பி.மாரிசெல்வி, நகரமைப்பு அலுவலர், உதவி செயற்பொறியாளர், மண்டல மேலாளர்கள், துப்புரவு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டரங்கு

தாம்பரம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டரங்கில் இன்று (2707.2023) தேர்தல் நடத்தும் அதிகாரி/மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்ற வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் மாமன்ற உறுப்பினர்கள் எம்.வி.வாணிஸ்ரீ (வார்டு-3), ம.சத்யா (வார்டு-12), ஏ.பிருந்தாதேவி (வார்டு-19), க.மகேஸ்வரி (வார்டு-27), க.மகாலட்சுமி (வார்டு-37), இரா.ராஜா (வார்டு-44), திருமதி ப.லிங்கேஸ்வரி (வார்டு-51), ச.மதுமிதா (வார்டு-58), செ.ரமாதேவி (வார்டு-68) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்வில் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக் குழுத்தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடன் […]
செங்கல்பட்டு மாவட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்.ராகுல்நாத் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர் தலைமையில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆர்.ராகுல்நாத், முன்னிலையில் நடைபெற்றது. உடன் கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநர் ஆ.ஜான்லூயிஸ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆர்.அழகுமீனா, பரங்கிமலை காவல் துணை ஆணையர் தீபக்சீவாஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, ஊரக வளர்ச்சி […]
தாம்பரம் மாநகராட்சியில் ஆணையாளர் ஆலோசனைக் கூட்டம்

தாம்பரம் மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் பொருட்டு இன்று மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா தலைமையில் பணிக்குழு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.