அட்சய திருதியை அன்று தங்கம் தான் வாங்க வேண்டுமா? வெள்ளை நிற பொருள்கள் வாங்கலாம்

அட்சய திருதியை சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாள் வரும் திரிதியை திதியில் வருவதே அட்சயத் திருதியை ஆகும். அட்சய என்ற சொல்லுக்கு கேடில்லாமல் குறைவில்லாமல் நிறைவாக வளரக்கூடியது என்று பொருள். அதாவது க்ஷயம் என்றால் கேடு, அக்ஷயம் என்றால் கேடில்லாத, அழிவற்ற பொருள் என்பதாகும்.வெள்ளை நிறப் பொருள்கள் அல்லது மஞ்சள் நிறப் பொருள்கள் வாங்குவது நலம் என்று சாஸ்திரம் கூறுகிறது. வெள்ளை நிறம் என்றால் பிளாட்டினம் வாங்கி அணிய வேண்டும், மஞ்சள் நிறம் என்றால் […]
அட்சய திருதியை சிறப்பு என்ன?

அட்சய திருதியை பற்றி பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றில் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கிருஷ்ணரும், குசேலரும் தமது குருகுலவாசத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். கிருஷ்ணர் கோகுலத்தை விட்டு நீங்கி துவாரகாபுரியின் மன்னரானார். ஆனால், குசேலரோ பரம ஏழையாக இருந்தார். அவருக்குத் திருமணமாகி 27 குழந்தைகள் இருந்தனர். தனது குழந்தைகளுக்கு அனுதினமும் உணவு அளிக்கவே அவர் பெரிதும் அவதிப்பட்டார். அவர் கொண்டு வரும் சிறு பொருளையும் சிக்கனமாக இருந்து குடும்பத்தை கவனித்தாள் அவரது மனைவி சுசீலை.இந்த […]