பழைய படங்களில் செய்த தவறுகளை தவிக்கிறேன் அஜித் குமார் பேட்டி

நடிகர் அஜித்குமார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் பல்வேறு சுவாரஸ்யமான கருத்துக்களை கூறியுள்ளார் ஆரம்ப கட்டத்தில் நடித்த படங்களில் பெண்களை கிண்டல் செய்தும் அவர்களை குற்றச்செயலில் ஈடுபடுத்தும் காட்சிகளிலும் நடித்த தன் காரணமாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தன் தவறை சரி செய்து கொண்டதாக கூறினார். இதுபோன்ற பெண்களுக்கு எதிரான காட்சிகளை தன் படங்களில் தவிர்த்து வருவதாகவும் அவர் கூறினார்

நடிப்புக்கு திடீர் முழுக்கு போடுவேன் – அஜித்

நடிகர் அஜித்குமார் இந்தியா டுடே டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:ஒவ்வொரு நாளும் ஆசீர்வதிக்கப்பட்ட நாள் தான் .அதை நாம் வாழ்ந்து பார்க்க . வேண்டும்.நான் நடிப்புக்கு முழுக்கு போடுவது திடீரென நடக்கலாம்.ஆனால் எப்போது என்று கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்

பஹல்காம் தாக்குதலுக்கு அஜித் கண்டனம்

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன்இந்த விவகாரத்தில், அரசு தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறது.நாம் அனைவரும் வேற்றுமைகளை மறந்து, அமைதியான சமூகமாக வாழ வேண்டும், என்று நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்.

நடிகர் அஜித் குமாருக்கு 4 மணி நேர அறுவை சிகிச்சை முடிந்தது

நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் கட்டி என்றும் மதுரை, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து அறுவை சிகிச்சை வல்லுனர்கள் வரவழைத்து 4 மணி நேரம் அறுவை சிகிச்சையில் மூளை கட்டி அகற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய ராணுவத்திற்கு ட்ரோன்கள் தயாரிக்கும் பணி – நடிகர் அஜித் குமாரை ஆலோசகராக கொண்ட தக்சா நிறுவனம் ஒப்பந்தம்.

இந்திய ராணுவத்திற்கு 200 ஆளில்லா விமானங்கள் தயாரித்து வழங்குவதற்கு நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்ட தக்சா நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக விமானவியல் துறை சார்பாக தக்சா நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு நடிகர் அஜித் ஆலோசகராக இருந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு தக்சா நிறுவனம் உலக அளவில் நடைபெற்ற ட்ரோன் போட்டியில் பங்கெடுத்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா, […]