சென்னையில் விமான சேவை பாதிப்பு: பயணிகள் அவதி

பொதுவாக டில்லியில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், பன்னாட்டு விமானமாக கொழும்பு சென்று, பிறகு சென்னை திரும்பி, மீண்டும் உள்நாட்டு விமானமாக அந்தமான் சென்றடையும். இந்நிலையில், டில்லியில் இருந்து வந்த அந்த விமானம் 3 மணி நேரம் தாமதமாக அதிகாலை 2.30 மணியளவில் வந்தடைந்தது. இதனால் இலங்கைக்கும் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னையில் நள்ளிரவில் திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு

விமானங்கள் தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்து பறந்த நிலையில் ஒரு விமானம் பெங்களூருக்கு திரும்பியது. 4 விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்களும் தாமதமானதால் பயணிகள் கடும் அவதி.