பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள மொத்தம் 445 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் ஆட்சேபனை இருந்தால் ஒரு மாதத்திற்குள் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் அமைகிறது விமான பயிற்சி மையம்

கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைப்பதற்கு திட்ட அறிக்கையை தயாரிக்க டெண்டர் கோரி, முதற்கட்ட பணிகளை தொடங்கியது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்(TIDCO)

மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ அவர்களை சந்திப்பதற்காக புதுதில்லி வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌

தமிழ்நாட்டின்‌ வளர்ச்சித்‌ திட்டங்களுக்கு ஒன்றிய அரசின்‌ நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ அவர்களை சந்திப்பதற்காக புதுதில்லி வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்களை புதுதில்லி விமான நிலையத்தில்‌, கழக மக்களவை குழுத்‌ தலைவர்‌ திரு. டி.ஆர்‌.பாலு, மக்களவை மற்றும்‌ மாநிலங்களவை குழுத்‌ தலைவர்‌ திருமதி கனிமொழி, உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌, தமிழ்நாடு அரசின்‌ தில்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ஏ.கே.எஸ்‌. விஜயன்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ ஆகியோர்‌ […]

உரிய முன்னறிவிப்பின்றி, முன்கூட்டியே புறப்பட்டு சென்ற விமானம்

திருச்சி விமான நிலையத்தில் செய்வதறியாது தவிக்கும் 25 பயணிகள் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு பறந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மாலை 4.20 மணிக்கு பதிலாக 3 மணிக்கே புறப்பட்டு சென்ற விமானம்.

சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தில் தொலைபேசி இணைப்பக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் நிர்மலா உள்நாட்டு முனையம் பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு நேற்றிரவு நிர்மலா பணிக்கு சென்றுள்ளார். காலை மற்றொரு பெண் அதிகாரி சென்று பார்த்த போது நிர்மலா தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. வரும் டிசம்பர் மாதம் நிர்மலா பணி ஓய்வு பெற இருந்தார். மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தகவல்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்‌ முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப்‌ பயணமாக

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌சென்னை விமானநிலையத்திலிருந்து அமெரிக்கா நாட்டிற்கு புறப்பட்டார்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ சென்னை விமான நிலையத்தில்‌

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்‌ முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப்‌ பயணமாக அமெரிக்கா நாட்டிற்கு புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார்‌. இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர்‌ திரு.துரைமுருகன்‌ உள்ளிட்ட மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்‌ உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

விமான நிலையத்தில் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி

சென்னை விமான நிலையத்தில் உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி சென்னை விமான நிலையத்தில் உலக உடல் உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு ஏர்போர்ட் ஆதாரிட்டி ஆப் இந்தியாவுடன் இணைந்து காவேரி தனியார் மருத்துவமனை, எஸ் ஆர் எம் தனியார் மருத்துவக் கல்லூரி இணைந்து உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது, இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சென்னை விமான நிலையத்தின் டெர்மினல் […]

விமான நிலையத்தில் திரியும் நாய்களைப் பிடித்து தடுப்பூசி மாநகராட்சி நடவடிக்கை

சென்னை விமான நிலையத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாநகராட்சி குழுவினர் கருதடை அறுவை சிகிச்சை செய்யப்படாத பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்களை மாநகராட்சி நாய் பிடி ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா். இதைதொடா்ந்து சாலையில் செல்பவா்களை நாய்கள் கடிப்பதை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பாக முகாம்கள் அமைத்து தெரு நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தியும் கருத்தடை அறுவை […]