ஆப்கானிஸ்தான நிலநடுக்கத்தில் பலி 800

கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 3000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஐந்தாவது பெரிய நகரமான ஜலாலாபாத்திலிருந்து 27 கிமீ தொலைவிலும், தலைநகர் காபூலில் இருந்து சுமார் 140 கிமீ தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.