நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார்!

லட்டு விவகாரத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் புகார் மனுவில் தெரிவிப்பு.
பஸ் டிரைவரை தாக்கிய சட்டக் கல்லூரி மாணவி வைரல் வீடியோ

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் மாநகர பேரூந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய சட்டகல்லூரி மாணவி, அவர் கணவர் உள்ளிட்ட 4 பேரை குரோம்பேட்டை போலீசார் கைதுசெய்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதிமுக கொடிகட்டிய காரும் பறிமுதல் தொடந்து விசாரணை திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் தடம் எண் 91V மாநகர பேரூந்தை ஓட்டுனர் அசோக்குமார் ஓட்டி சென்றார். நடத்துனர் இருசப்பன் உள்ளிட்ட பயணிகள் பேரூந்தில் இருந்த நிலையில் குரோம்பேட்டையில் பேரூந்து நிறுத்தத்தில் நிற்க ஓரமாக பேரூந்தை அசோக்குமார் ஓட்டியுள்ளார். […]
குரோம்பேட்டையில் பஸ் ஊழியர்கள் திடீர் மறியல் வழக்கறிஞர்கள் தாக்குதல் எதிரொலி

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் காரை உரசியதாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு சென்னை திருவான்மையூரில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டுனர் இருச்சப்பன் மற்றும் நடத்துனர் அசோக குமார் குரோம்பேட்டை அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரின் மீது உரசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்து அரசு பேருந்து வழிமறித்து காரில் […]
எனக்கு எந்த சம்மனும் வரவில்லை : சபாநாயகர் அப்பாவு!

நான் ஏதோ ஒரு கருத்தை சொல்லியதாக அதிமுக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். அது சம்பந்தமான எந்த விதமான சம்மனும் எனக்கு இதுவரை வரவில்லை. எனது சென்னை அலுவலகத்திலோ அல்லது முகாம் அலுவலகத்திற்கோ வரவில்லை. அனைத்து உதவியாளர்களிடமும் இது பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டேன். இருப்பினும் பத்திரிகை செய்திகளின் வாயிலாக நான் நீதிமன்ற சம்மனை மறுத்து திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்பட்டிருக்கிறது. நான் நீதிமன்றத்தை மதிக்கக் கூடியவன் வருகிற 13ம் தேதி சம்மன் வந்தாலும் […]
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமன் ஆளுநர் ஒப்புதல்

அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா செய்த நிலையில், பி.எஸ். ராமன் பெயர் பரிந்துரை ஏற்றுக்கொண்டார் ஆளுநர்
வெள்ள நிவாரண தொகையை ஏரி புனரமைப்புக்கு தந்த வழக்கறிஞர்
குரோம்பேட்டை பாரதிபுரம் சம்மந்தம் தெருவை சேர்ந்த வழக்கறிஞர் ராமதாஸ். இவருக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 6000 வழங்கப்பட்டது. அவர் அதனை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரி புனரமைப்புக்கு வழங்குவதாக அறிவித்தார். இதற்கான காசோலையை அவர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார்.
ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது …….

2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என ஓ.பி.ரவீந்திரநாத் கோரிக்கையை ஏற்று 30 நாட்கள் தீர்ப்பு நிறுத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்…..