தேர்தல் விளம்பரங்களுக்காக மட்டுமே பாஜக ஒரே ஆண்டில் சுமார் ₹432 கோடி செலவு செய்துள்ளது

2022-23ம் நிதியாண்டில் பாஜகவுக்கு வங்கிகளில் இருந்து வட்டியாக மட்டும் ₹237 கோடி கிடைத்துள்ளது. அக்கட்சியின் வருமானம் ₹2,364 கோடி என தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய செய்தித்தாள் விற்ற லாபம் 10 மடங்கு அதிகரித்த அதே நேரத்தில் புதிய செய்தித் தாள் வாங்கிய செலவு ₹6 லட்சம் குறைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் பாஜக தாக்கல் செய்துள்ள வரவு செலவு கணக்கில் தேர்தல் செலவுகள் காட்டப்பட்டுள்ளன!