நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்களை இன்று (மார்ச்.06) மாலைக்குள் அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என அக்கட்சி தலைமை அறிவிப்பு
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்களை இன்று (மார்ச்.06) மாலைக்குள் அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என அக்கட்சி தலைமை அறிவிப்பு
அதிமுக – புதிய தமிழகம் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது

மக்களவைத் தேர்தலுக்காக இணைந்துள்ள இந்த கூட்டணி சட்டமன்றத் தேர்தல் வரை தொடரும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை பிறகு முடிவு செய்யப்படும்-அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
“வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி மிக வலுவான கூட்டணியாக அமையும்;

விரைவில் எந்த தொகுதியில் போட்டி என்பதை ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுப்போம்” -சென்னையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி
தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் அதிமுக வெளி நடப்பு

தாம்பரம் மாநகராட்சியில் 2024-25ம் ஆண்டுகான நிதி நிலை அறிக்கையை மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் தாக்கல் செய்தார். அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடையணிந்த நிலையில் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் இன்று கூடியது. இதில் துணைமேயர் ஜி.காமராஜ், ஆணையாளர் அழகுமீனா, அதிகாரிகள், மண்டலகுழு தலைவர் டி.காமராஜ், திமுக கவுன்சிலர்கள், ஜெகன், சுரேஷ், மதிமுக மாமன்ற உறுப்பினர் புஹிரா பானு […]
“தமிழ்நாட்டில் தேசிய கட்சிக்கு இடமில்லை; இனி திராவிடம் vs திராவிடம் தான்”

-சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்:

மானநஷ்ட வழக்கை நிராகரிக்கக்கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவிற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவு
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தமாக இளைஞரணி தலைவர் யுவராஜ் சந்திப்பு.
வண்டலூர் சாலையில் நடந்த சாலை விபத்தில் பொன்னேரி தொகுதி முன்னாள் அ. தி.மு.க எம்.எல்.ஏ. ரவிகுமார் பலி
அவரது மனைவி பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல்!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பம்.