அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்
கோவை – சிங்கை ராமச்சந்திரன் திருச்சி – கருப்பையா பெரம்பலூர் – சந்திரமோகன் மயிலாடுதுறை – பாபு ஸ்ரீபெரும்புதூர் – பிரேம் குமார் தருமபுரி – அசோகன் திருப்பூர் – அருணாசலம் நீலகிரி – லோகேஷ் வேலூர் – பசுபதி திருவண்ணாமலை – கலியபெருமாள் கள்ளக்குறிச்சி – குமரகுரு சிவகங்கை – சேகர் தாஸ் நெல்லை – சிம்லா முத்துச்சோழன் புதுச்சேரி – தமிழ்வேந்தன் தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி கன்னியாகுமரி – பசிலியா நசரேத்
அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதி; தொகுதிகள் என்னென்ன?

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக கடந்த தேர்தலைப் போலவே 4 தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் பரபரப்பு தேசம் முழுவதும் எதிரொலிக்கும் சூழலில், மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் அதிமுக – தேமுதிக கூட்டணி இறுதியாகியுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, 4 மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு ராஜ்ய சபா தொகுதி வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் […]
திமுக – அதிமுக பெற்ற நிதி எவ்வளவு?

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் ரூ.509 கோடியை தமிழகத்தின் ஆளும்கட்சியான திமுகவுக்கு தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. திமுக மொத்தம் ரூ.656.5 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் ரூ.509 கோடியை ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் வழங்கி உள்ளது. இது லாட்டரி மார்ட்டினின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனமாக உள்ளது. லாட்டரி மார்ட்டின் […]
லாட்டரி, சூதாட்டம் நடத்தும் future Gaming என்ற நிறுவனத்திடம் இருக்கு 509 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்ற தி.மு.க. மக்களின் உழைப்பை சுரண்டி உயிரை குடிக்கும் நிறுவனத்திடம் இருந்து பல கோடி நிதி பெற்ற தி.மு.கவுக்கு பாராளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்

ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்த ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜி.சரவணன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் அதிமுகவில் இணைந்தனர் திமுக, மதிமுக நிர்வாகிகள் உள்பட 300 பேர் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் மேலும் மேலும் அதிமுகவை வலுப்படுத்தி வரும் ஈபிஎஸ்
இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது

சின்னம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் வருகை
போதை பொருளுக்கு எதிராக சிட்லபாக்கத்தில் அதிமுக மனித சங்கிலி

இளைஞர்களை பாதிக்கும் போதைப் பொருள்கள் தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதியில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போதை பொருட்களால் இளைஞர்கள் பாதிக்கப்படும் நிலையில் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. போதை பொருட்களை திமுக அரசு தடுக்க வேண்டி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பின்படி மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு […]
அண்ணா தி.மு.க. மகளிரணி சார்பில், தலைமைச் செயலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் சர்வதேச மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது
கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி மகளிர்தின கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார்.நலிவுற்ற மகளிருக்கு நலத்திட்ட உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்களை இன்று (மார்ச்.06) மாலைக்குள் அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என அக்கட்சி தலைமை அறிவிப்பு