ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் ஞா.பிரேம்குமாரை ஆதரித்து சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதி 39வது வார்டு காந்திநகர், அம்பாள் நகர் பகுதியில் பகுதி அதிமுக இணைச் செயலாளர் எஸ்.ராஜாத்தி தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்கு கேட்டனர்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் ஞா.பிரேம்குமாரை ஆதரித்து சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதி 39வது வார்டு காந்திநகர், அம்பாள் நகர் பகுதியில் பகுதி அதிமுக இணைச் செயலாளர் எஸ்.ராஜாத்தி தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்கு கேட்டனர். இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள். இதில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் இ.எம்.டேனியல் 39வது வடக்கு வட்டக் செயலாளர் பா.வேதகிரி, வட்ட பொருளாளர் போர்வெல் சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
குரோம்பேட்டை 35 வது வார்டில் திருப்பெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரித்து வட்டசெயலாளர் எம்.கே.சண்முகம் தலைமையில் சின்னதம்பி, எம்.ஐ.டி.குமார் மற்றும் அதிமுகவினர் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்
எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை – எடப்பாடி பழனிசாமி

இங்குள்ள ஒவ்வொருவரும் எம்எல்ஏ தான்… கட்சி பொதுச்செயலாளர் தான் அ.தி.மு.கவின் வெற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சாரும் – எடப்பாடி பழனிசாமி அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
சேலம் அருகே தாரமங்கலம் அதிமுக நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம் வீட்டில் ரூ.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
பாலசுப்பிரமணியத்தின் வீடு மற்றும் நகைக் கடையில் 5 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாலசுப்பிரமணியம் வீட்டில் இருந்து தங்கக் கட்டிகள் மற்றும் ஆவணங்களை வருமானவரித் துறையினர் கைப்பற்றினர்.
வடசென்னை தொகுதியில் ஜெயிக்க போவது யார்?

வட சென்னை தொகுதியில் தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க., என மும்முனை போட்டி நடக்கிறது. இந்த மூன்று கட்சி வேட்பாளர்களும் பலம் வாய்ந்தவர்கள். இந்த மூவருக்கும் தேர்தல் களம் என்பது புதிதும் அல்ல. தற்போது கள ஆய்வில் வந்த தகவலின் படிஎவ்வளவுதான் பா.ஜ.க., வேட்பாளர் பால் கனகராஜ், அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் எவ்வளவு போராடினாலும் தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வெற்றி உறுதி என்றே தோன்றுகிறது என நேற்று பதிவு செய்யப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக […]
வடசென்னை தொகுதியில் ஜெயிக்க போவது யார்?

வட சென்னை தொகுதியில் தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க., என மும்முனை போட்டி நடக்கிறது. இந்த மூன்று கட்சி வேட்பாளர்களும் பலம் வாய்ந்தவர்கள். இந்த மூவருக்கும் தேர்தல் களம் என்பது புதிதும் அல்ல. தற்போது கள ஆய்வில் வந்த தகவலின் படிபா.ஜ.க., வேட்பாளர் பால் கனகராஜ், அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் எவ்வளவு போராடினாலும் தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வெற்றி உறுதி என்றே தோன்றுகிறது.
சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு எதிராக கடைசி நேரத்தில் மனுதாக்கல் செய்துள்ள அதிமுக முன்னாள் எம்.பி சந்திரகாசி

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் 2014 தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி பதவி வகித்தவர் சந்திரகாசி. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மாலை தனது ஆதரவாளர்கள் மூலம் வேட்புமனு தாக்கல் செய்த சந்திகாசி, ஊடகத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சென்ற பின் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு உறுதிமொழி ஏற்று பின்னர் படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சந்திரஹாசனுக்கு போட்டியாக வேட்புமனு செய்த கையோடு, அரியலூர் நகரில் சந்திரஹாசனுடன் ஒரே வாகனத்தில் பிரச்சாரம் செய்துள்ளார் […]
ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” – உயர்நீதிமன்றம்
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, […]
அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசி இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கிறார்
குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல்

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரிக்கும் சிபிஐ