அதிமுகவுடன் கூட்டணி: டிடிவி தினகரன்

2026 தேர்தலில் அதிமுகவுடன் அமமுக கூட்டணி அமைத்திருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்று கூறியுள்ள அவர், அமமுகவின் உயரம் என்னவென்பது தங்களுக்கு தெரியும், அதையறிந்து உரிய இடங்களை கூட்டணியில் பெற்று போட்டியிடுவோம் என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார். 2026 தேர்தலில் பொது எதிரியான திமுகவை வீழ்த்துவதே தங்களது குறிக்கோள் என்றும் கூறினார்.

அதிமுக எம்பி உத்தேச பட்டியல்

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் போட்டியில் கீழ்க்கண்டவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன செம்மலைஜெயக்குமார்அன்வர் ராஜாசதன்பிரபாகர்ராஜ்சத்தியன்விந்தியாபோன்றவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன

திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி கார் விபத்தில் உயிரிழப்பு!*

கோவை கல்லார் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தியும், பல் மருத்துவருமான திவ்யபிரியா (28) உயிரிழந்தார்.திருமணமாகி 3 மாதங்களே ஆன திவ்யபிரியா, மதுரையில் இருந்து குடும்பத்துடன் ஊட்டி சென்றுவிட்டு திரும்பும்போது கொண்டை ஊசி வளைவில் கார் பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் நீடிப்பாரா?

பாரதிய ஜனதா கூட்டணியில் நீடித்து வந்த ஓ பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி தலைமையிலான அண்ணா திமுக அந்த அணிக்கு வந்த பிறகு தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கருதுகிறார்கள். இது தொடர்பாக இன்று இறுதியான முடிவை ஓ. பன்னீர்செல்வம் எடுக்க இருக்கிறார். அவர் தனது ஆதரவாளருடன் ஆலோசனை நடத்துகிறார் . பாரதிய ஜனதா கட்சி எங்களை தவிர்க்க முடியாது என்று ஓபிஎஸ் அணியின் வைத்திலிங்கம் நேற்று தெரிவித்தார்

எடப்பாடி பிறந்தநாளுக்கு அண்ணாமலை வாழ்த்து

அதிமுக பொதுச் செயலாளர்எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார் அவருக்கு தமிழக பாரதி ஜனதாவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார் அண்ணன் பழனிசாமி , நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.- என அண்ணாமலை.கூறி உள்ளார்

சிட்லபாக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், செம்பாக்கம் – சிட்லபாக்கம் பகுதி கழகம் சார்பில், பகுதி கழக செயலாளர் இரா. மோகன் ஏற்பாட்டில், 34-வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் வழங்கினார். உடன் மாவட்ட எம்.-ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஜி.எஸ். புருஷோத்தமன், 34 –வது வார்டு வட்ட செயலாளர் ரவி, அவைத்தலைவர் என். பாஸ்கரன், ஜெ. முரளி (எ) […]

தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு எடப்பாடி பழனிசாமி மனுவுக்கு ஜன.27ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜர்

அறப்போர் இயக்கத்திற்கு எதிரான அவதூறு வழக்கில் டிசம்பர் 11ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், விக்கிரவாண்டி டோல்கேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்