அமைச்சர் பொன்முடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்

அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 8ம் தேதி மனுத்தாக்கல் மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என நீதிபதி கூறிய நிலையில், விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜெயக்குமார் ஆஜர்..
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணியை குறித்து பாஜக குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க கூடாது நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை உத்தரவு…
தாம்பரத்தில் அண்ணா சிலைக்கு அதிமுகவினர் பேரணியாக சென்று மாலை அணிவிப்பு

பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் தாம்பரம் மத்திய பகுதி கழகச் செயலாளர் எல்லார் செழியன் ஏற்பாட்டில் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தாம்பரம் சண்முகம் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்பு அங்கிருந்து அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டது. பின்பு தாம்பரம் […]
அண்ணாசாலையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்ட அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணாசாலையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்ட அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் எடப்பாடி.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார் ..

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் மரியாதை நிமித்தமாக டெல்லியில் கிருஷ்ணன் மேனன்மார்க் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களுடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அந்த சந்திப்பின்போது ஜி 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கு தனது வாழ்த்துக்கள் தெரிவிக்குமாறு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி சாலையில் அதிமுகவினர் கோஷ்டி மோதல்..

குரோம்பேட்டையில் அண்ணா பிறந்தநாளையொட்டி மேடை விழா நடத்த முன்னாள் பல்லாவரம் எம்.எல்.ஏ மகன் ஜெயபிரகாஷ் ஏற்பாடு செய்துள்ளார், அந்த தகவல் அறிந்த தற்போது புதிய பகுதி நிர்வாகியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சதீஷ் அவரின் ஆதரவாளர்களுடன் அங்கு வந்த ஏற்பாடுகளை தடுத்துள்ளனர், இதனால் இருதரப்பிலும் வாய் தகராறு ஏற்பட்டு, அதனை தொடந்து இரு கோஷ்டியாக நடு சாலையிலேயே மோதிக்கொண்டனர், இது குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீசார் தடுத்து அவர்களை களைத்தனர். இதனால் ஜி.எஸ்.டி சாலையில் அதிமுகவினர் கோஷ்டி […]
அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..

வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டையில் ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா, வருமானத்துக்கு அதிகமாக ₹2.64 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு.

மேலும் இது தொடர்பாக அவரது மனைவி, மகள்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016ல், ₹3.21 கோடி மதிப்புள்ள 21 சொத்துகள் வைத்திருந்ததாகவும், 2021 தேர்தலில் போட்டியிடும்போது அவரிடம் ₹16.44 கோடி மதிப்பில் 38 சொத்துகள் அதிகரித்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தகவல்.
புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை

அவரது அலுவலகம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்சோதனை துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், தி.மலை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்தில் சோதனை சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரில் சோதனை என தகவல்.
திருப்பதி கோயிலை சுத்தம் செய்யும் பணி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 18ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்குகிறது .வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி, கோயிலை சுத்தம் செய்யும் பணி தொடக்கம் மூலவர் மீது பட்டு வஸ்திரம் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம் சுத்தம் செய்பட்டன. பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், மூலிகை திரவியங்கள் கோயில் முழுவதும் தெளிக்கப்படுகிறது வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி விமரிசையாக நடைபெற்ற ஆழ்வார் திருமஞ்சனம்.