முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதற்கு, பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த அதிமுக மாவட்ட செயலாளர்

முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு, நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்கூட்டம் நடத்தி, பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார். முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய குமரகுரு, பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கோர நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.

தமிழக சட்டமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம்

ஓபிஎஸ் , வைத்தியலிங்கம் மனோஜ் பாண்டியன் அவர்களின் எம்எல்ஏ தகுதி நீக்கம் தொடர்பாக முடிவு செய்ய கூட்டம்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி வேலுமணி, கே.பி. முனுசாமி, ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் சபாநாயகர் அப்பாவு உடன் சந்திப்பு

சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் குறித்து மீண்டும் கோரிக்கை என தகவல்.

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் அதிமுக

பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டு சிறையில் உள்ள 36 பேரை விடுவிக்க அதிமுக கோரிக்கை. இன்று தமிழ்நாடு சட்டசபை கூட உள்ள நிலையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறது.

அதிமுக சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த 29 தொகுதிகள்

தி. நகர் -137வேளச்சேரி -4,352திருப்போரூர் -1947செய்யூர் -4042உத்திரமேரூர் -1622காட்பாடி -746ஜோலார்பேட்டை -1091உளுந்தூர்பேட்டை -5256ராசிபுரம் -1952திருச்செங்கோடு-2862தாராபுரம் -1393அந்தியூர் -1275ஊட்டி -5348குன்னூர் -4105திருப்பூர் தெற்கு -4709அரியலூர் -3234ஜெயங்கொண்டம் -5452விருத்தாச்சலம் -862நெய்வேலி -977பண்ருட்டி -4697கடலூர் -5151மயிலாடுதுறை -2742பூம்புகார் -3299திருமயம் -1382ராஜபாளையம் -3898சங்கரன்கோவில் -5297வாசுதேவநல்லூர்-2367தென்காசி -370ராதாபுரம் -5925… மொத்தமாக 86490 வாக்குகள் வித்தியாசத்தில் 29 தொகுதிகள் இழப்பு.. சுமார் 10 ஆயிரம் வாக்குகளுக்கும் கீழான வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகள் 14.. பொன்னேரி -9689வேலூர் -9181அணைக்கட்டு -6360குடியாத்தம் -6901கலசப்பாக்கம் -9222விக்கிரவாண்டி -9573சேலம் வடக்கு -7588ஈரோடு […]

அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம்

அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் தமிழகமெங்கும் இருந்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும் ராதாபுரம் முன்னாள் எம்எல்ஏவுமான வழக்கறிஞர் இன்பதுரை இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

பாஜகவுடன் கூட்டணி முறிவில் அதிமுக உறுதி: இபிஎஸ் பேட்டி

பாஜகவுடன் கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2 கோடி தொண்டர்களின் விருப்பத்துக்கு இனங்க கூட்டணி முறிவு. 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக தோல்வி அடைந்துள்ளது எனவும் கூறினார்.

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து தன்னிடம் எந்த விளக்கத்தையும் கட்சித் தலைமை கேட்கவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்

கோவையில் இருந்து டெல்லி செல்லும் முன் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: டெல்லி பயணம் என்பது வழக்கமான ஒன்றுதான். என்னுடைய நடைபயணம் குறித்து, டெல்லியில் உள்ள தலைவர்களிடம் விளக்க உள்ளேன். நடைபயணத்தில் மூத்த தலைவர்கள் சிலரும் பங்கேற்க உள்ளனர். அவர்களின் தேதியை கேட்டுப்பெறவும் செல்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஏற்படுத்தியது பாஜக. அந்தக் கூட்டணி தமிழகத்தில் உள்ளது. கூட்டணிக்கு தேசிய அளவில் பாஜகதான் தலைமை வகிக்கிறது. அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து என்னிடம் எந்த விளக்கத்தையும் கட்சித் […]

திமுக ஆட்சியை நம்பி உயிர் விட்ட விவசாயி எம்.கே.ராஜ்குமார் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்;

திமுக ஆட்சியை நம்பி உயிர் விட்ட விவசாயி எம்.கே.ராஜ்குமார் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்; அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்” அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்