தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிட்லபாக்கம்‌ ச.ராசேந்திரன் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகப்‌ பொதுச்‌ செயலாளரும்‌, சட்டமன்ற எதிர்க்கட்சித்‌ தலைவரும்‌, தமிழ்‌நாடு முன்னாள்‌ முதலமைச்சருமான ‘புரட்சித்‌ தமிழர்‌’ எடப்பாடி கே.பழனிசாமி சென்னை, பசுமைவழிச்‌ சாலையில்‌ உள்ள செவ்வந்தி இல்லத்தில்‌ நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌ சிட்லபாக்கம்‌ ச.ராசேந்திரன்‌, முன்னாள்‌ எம்பி. நேரில்‌ சந்தித்து பூங்கொத்து வழங்கி‌ வாழ்த்து பெற்றார்‌.

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பான ஆவணத்தை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

எடப்பாடிக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து கே.சி.பழனிசாமி முறையீடு செய்திருந்தார். பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியில் இருந்து கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டுவிட்டார் – இ.பி.எஸ். தரப்பு பதில்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் நவம்பர் 21ம் தேதி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!

பூத் கமிட்டி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்புகளின் களப்பணி குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு

அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் அச்சடிப்பு, டிஜிட்டல் மயமாக்கப்பட்டதில் முறைகேடு என சி.ஏ.ஜி அறிக்கை

முன்னாள் துணை வேந்தர் சூரப்பா விசாரணைக்கு ஆஜராக சட்டப்பேரவை கணக்கு தணிக்கை குழு உத்தரவு விரிவான விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கணக்கு தணிக்கை குழு தெரிவித்துள்ளது

சட்டமன்றத்தில் தேவர் படத்தை வைத்தது அதிமுக அரசுதான். சென்னை நந்தனத்தில் தேவர் சிலையை அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், மரியாதை செலுத்திய பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் திருமகனார் நினைவிடத்தில் அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்

பசும் பொன் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் பெரும்திரளாக சாலைகளின் கூடி நின்று எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.

முதலமைச்சர் குறித்து இனி அவதூறாக பேசமாட்டேன்” என சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் உறுதிமொழி

அதன் அடிப்படையில், 15 நாட்களுக்கு விளாத்திகுளம் போலீசில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவு தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செல்லப்பாண்டியன் அவதூறாக பேசிய நிலையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சட்டப்பேரவையில் கறம்பக்குடி மருத்துவமனை குறித்த அமைச்சர் பதிலுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு

கேள்வி நேரத்தில் அரசியல் ரீதியாக குற்றம் சாட்டக் கூடாது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாதம் அதிமுக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகளில் வெறுமனே பெயர் பலகை மட்டுமே மாற்றப்பட்டது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எந்த மருத்துவமனையில் அவ்வாறு செய்யப்பட்டது என்று கூறினால் விவாதம் நடத்த தயார் – விஜயபாஸ்கர் மருத்துவ பணி இடங்களை உருவாக்காமல்130 மருத்துவமனைகளை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக தரம் உயர்த்தி உள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் 130 மருத்துவமனைகளின் பட்டியலை தருகிறேன், […]