தாம்பரத்தில் அதிமுக வெள்ள நிவாரண உதவி

தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்வேறு பகுதியில் புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் சமத்துவபெரியார் நகர், சசிவரதன நகர் உள்ளிட்ட வெள்ளம் சூழப்பட்ட பகுதியில் மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, பெருங்களத்தூர் பகுதி செயலாளர் சீனுபாபு, மாமன்ற உறுப்பினர் சாந்தி புருஷோதமன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் உடன் இருந்து நிராவணம் வழங்கனர்கள்…
அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று அறிவிக்கக் கூறி வி.கே.சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016.ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.இதையடுத்து கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பொதுக்குழு சசிகலாவை நியமித்தது.இதையடுத்து ஒரு சில நாட்களிலேயே உச்சநீதி மன்ற தீர்ப்பு படி ஊழல் வழக்கில் சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்கா மகன் சுதாகர் ஆகியோர் சிறை சென்றனர்.இதையடுத்து மீண்டும் கூடிய பொதுக்குழு பொதுச்செயலாளர் பதவியை நீக்கி, நிர்வாக ரீதியாக புதிய பொறுப்புக்களை உருவாக்கியது.இதை எதிர்த்து சசிகலா உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.சசிகலாவின் மனுவை கீழமை […]
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க தடை இல்லை..!

உச்ச நீதி மன்றம்..!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தொடர்ந்த வழக்கு டிச. 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு- சென்னை உயர்நீதிமன்றம்

மறு உத்தரவு வரும்வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உத்தரவாதம். உத்தரவாதத்தை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்.
அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை சம்பவம்: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பழனிசாமி உள்ளிட்டோர் மீது அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளது. 2 வாரங்களில் நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு விவகார வழக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு விவகார வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒருவாரத்திற்கு ஒத்திவைத்தது. பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்த மனு ஒத்திவைப்பு. வழக்கை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கடிதம் வழங்கிய நிலையில் கோரிக்கை ஏற்பு. பிற வழக்குகளை தாமதிக்க ஓபிஎஸ் முயற்சி செய்வதாக பதிவாளருக்கு இபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் 486 இஸ்லாமியர் வீடுகளை வலுக்கட்டாயமாக இடித்த தி.மு.க அரசுக்கு அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகாரில் முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்

என சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் ₹350 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி வழக்கு
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு. TNPSC தலைவர் தவிர பிற பணி நியமனங்கள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தகவல்.