அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது – உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தாமல் நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கு தடை கோரி, திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. சிவில் நீதிமன்றத்தை அணுகுங்கள் – நீதிபதி

மாங்கனி’க்காக ‘தோட்டத்தை’ வட்டமிடும் அதிமுக… அதிகாரத்துக்காக பாஜகவை துரத்தும் அன்புமணி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், கூட்டணி அமைத்துதான் தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பாஜகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தையை அன்புமணி ராமதாஸ் நடத்தி வருகிறார். அதேவேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமதாஸை சந்தித்திருக்கிறார். பாமகவின் திட்டம்தான் என்ன? பொதுக்குழு கூட்டத்திலேயே பாமக 12 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்தத் தொகுதிகளில் பூத் கமிட்டிகள் பாமக சார்பாக அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் சொல்லப்பட்டது. […]

பேரறிஞர் அண்ணாவின் 55- வது நினைவு நாளையொட்டி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அண்ணா தி. மு. க சார்பில், மாவட்ட கழகச் செயலாளர் சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் தலைமையில், தாம்பரம் மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுரு சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

முன்னாள் அமைச்சர் டி. கே. எம். சின்னையா மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் திமுக அரசை கண்டித்து சிட்லபாக்கத்தில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடந்தது

இதில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் ராஜகோபால். மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி .கே .எம் சின்னையா, பகுதி செயலாளர் இரா.மோகன், மாமன்ற உறுப்பினர் சுபாஷினி புருஷோத்தமன், இளைஞர் அணி செயலாளர் புருஷோத்தமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாமக, தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை…

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது . தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாமக, தேமுதிகவின் எதிர்பார்ப்புகளை அதிமுக தலைமை கோரியுள்ளது . பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து வலுவான கூட்டணி அமைக்க அதிமுக வியூகம் .

நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச தொகுதிப் பங்கீட்டு குழு அமைப்பு:

முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் கொண்ட குழு அமைப்பு.

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நடத்த அதிமுகவில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு

அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைப்பு நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக பிரச்சார பணிகளை ஒருங்கிணைக்க 10 பேர் கொண்ட குழு

2024ம் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுக சார்பில் குழுக்கள் அமைப்பு;

கே.பி.முனுசாமி தலைமையில் 5பேர் கொண்ட தொகுதிப் பங்கீட்டுக் குழு; நத்தம் விஸ்வநாதன் தலைமையில் 10பேர் கொண்ட தேர்தல் தயாரிப்புக் குழு; தம்பிதுரை தலைமையில் 10பேர் கொண்ட தேர்தல் பிரச்சார குழு; முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டன. குழுக்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்