பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை

புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்குவதை பல அரசு ஆஸ்பத்திரிகள் செயல்படுத்தி வருகின்றன. இதை பல ரெயில்வே ஆஸ்பத்திரிகளும் செய்து வருகின்றன. அந்தவகையில் தென்கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் முதல் முறையாக ஜார்கண்ட் சக்ரதார்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளது. மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பிறந்த 4 குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டையும், பிறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.

ஆதாரை கிராமிய புதுப்பிக்க புதிய செயலி தயாராகிறது

மத்திய அரசு ஆதார் தொடர்பான தகவல்களை புதுப்பிக்க சேவை மையத்துக்கு செல்வதற்கு பதில் ஒவ்வொருவரும் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் வகையில் புதிய செயலியை உருவாக்கி வருகிறது இதில் அனைத்து தகவல்களும் இடம்பெறும் இந்த செயலி விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது

வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும்:

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக கருத முடியாது. வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும். குடியுரிமை விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் தான் முடிவு எடுக்க வேண்டும். பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது சரிதான். இதற்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது. வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நிறுத்த, சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.