வேட்டையன் என்ற படத்தின் படபிடிப்பிற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இதுவரை 75 சதவீதம் படபிடிப்பு முடிந்துள்ளதாக தெரிவித்த ரஜினி, அடுத்த படம் எதுவும் இதுவரை புக் ஆகவில்லை என்றும் தெரிவித்தார்.

“இதான் தவெகவின் உறுப்பினர் கார்டு.. நான் எடுத்துட்டேன்”

கட்சியின் உறுதிமொழி பிடித்திருந்தால் நீங்களும் எளிதாக இணையலாம் எனக் கூறி தவெகவில் இணைவதற்கான வழிமுறைகளை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் விஜய்

நடிகர் அஜித் குமாருக்கு 4 மணி நேர அறுவை சிகிச்சை முடிந்தது

நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் கட்டி என்றும் மதுரை, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து அறுவை சிகிச்சை வல்லுனர்கள் வரவழைத்து 4 மணி நேரம் அறுவை சிகிச்சையில் மூளை கட்டி அகற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக அணியில் அஇசமக

பாஜக கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இணைந்துள்ளது.இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி தொகுதியில் ஆர்.சரத்குமார் அல்லது ராதிகா சரத்குமார் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து

“என் தம்பி, தங்கைகள் அனைவரும் அனைத்து தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர் கொண்டு வெற்றி பெற்று, விரும்பிய துறையில் உச்சம் தொட வாழ்த்து”

தமிழக வெற்றி கழக விஜயின் முதல் மாநாடு

ஏப்ரல் மாதத்தில் மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த த.வெ.க தலைவர் விஜய் திட்டம். கட்சி ரீதியாக 100 மாவட்டங்களை உருவாக்கி நிர்வாகிகளை நியமித்த பிறகு மாநாட்டை நடத்த திட்டம்..

100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்பாளர்கள் – விஜய் முடிவு?

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்புகள் வழங்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முடிவு? புதிய மாவட்ட பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாகும் என தகவல்?