இந்திய ராணுவத்திற்கு ட்ரோன்கள் தயாரிக்கும் பணி – நடிகர் அஜித் குமாரை ஆலோசகராக கொண்ட தக்சா நிறுவனம் ஒப்பந்தம்.

இந்திய ராணுவத்திற்கு 200 ஆளில்லா விமானங்கள் தயாரித்து வழங்குவதற்கு நடிகர் அஜித்குமாரை ஆலோசகராக கொண்ட தக்சா நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக விமானவியல் துறை சார்பாக தக்சா நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு நடிகர் அஜித் ஆலோசகராக இருந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு தக்சா நிறுவனம் உலக அளவில் நடைபெற்ற ட்ரோன் போட்டியில் பங்கெடுத்தது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா, […]
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் 10ம் தேதி ரிலீஸ்;
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் மிருணாள் தாக்கூர்

‘மாவீரன்’ படத்திற்கு பின் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதற்கான பணிகளை படக்குழு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் கமிட் ஆகியுள்ளார். தற்போது ஹிந்தி படங்களில் பிஸியாக இருக்கும் அவர் ஓரிரு வாரங்களில் இப்படத்தில் கையெழுத்திட உள்ளார். ‘சீதா ராமம்’ மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் மிருணாள் தாக்கூர்.
சென்னை, பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் முதல் வழக்கறிஞர் அணி கூட்டம் இன்று நடைபெறுகிறது.

விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்துகொள்வார் என தகவல்?
ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக சந்தானம் படம் குரோம்பேட்டையில் பேட்டி

நடிகர் சந்தானம் தனது டிடி திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு ஆன்லைன் சூதாட்டங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார் நடிகர் சந்தானத்தின் டிடி திரைப்படம் திரையரங்கில் வெளியாகியதையொட்டி குரோம்பேட்டை வெற்றி திரையரங்கம் சந்தானம் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். தமிழகம் முழுவதும் நடிகர் சந்தானத்தின் புதிய திரைப்படமான டிடி திரைப்படம் வெளியாகி உள்ளது. சந்தானம் ரசிகர்கள் காலை முதல் திரையரங்கு வாயிலில் படம் வெளியானதை ஒட்டி பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதனை ஒட்டி […]
நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் கிளிக்!!
நடிகர் தனுஷ் நடிக்கும் #CaptainMiller திரைப்படத்தின் டீஸர் ஜூலை 28ஆம் தேதி வெளியாகிறது!!
இன்னும் நான் காதலிக்கிறேன்: நடிகை நளினி ஓப்பன் டாக்

தமிழ் திரையுலகில் 1980-90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த நளினி நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் நளினி, “ராமராஜன் மிகவும் தங்கமானவர். விவாகரத்து ஆனாலும் ராமராஜனை இன்னும் நான் காதலிக்கத்தான் செய்கிறேன். இது அவருக்கும் தெரியும்” என்றார்.
ரூ.170 கோடி வருமானமா? : பிரபல நடிகர் பதில்

தமிழில் ‘அஞ்சான்’ படத்தில் வில்லான நடித்து பிரபலமானவர் மனோஜ் பாஜ்பாய். இவர் மும்பையில் சமீபத்தில் நடந்த நேர்காணலில் பங்கேற்றபோது, ரூ,170 கோடி வருமானம் வைத்துள்ளதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, “நான் செய்யும் வேலையை வைத்து இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியாது. இன்னும் எனது வங்கி கணக்கில் பணம் சேர்க்க கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன்” என்றார்.
நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘Project-K’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!!