சரத்குமாருக்கு கேக் ஊட்டிவிட்ட ராதிகா

நடிகை ராதிகா, தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னதிரையிலும் பல தொடர்களை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராதிகா திரைத்துறையில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை அவர் தன் கணவர் சரத்குமாருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

தோல்வியில் இருந்து ரஜினி மீண்டு வர உதவிய இயக்குநர்கள்

தமிழ் திரைத்துறையில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துவரும் ரஜினி, பல தோல்வி படங்களையும் வழங்கியுள்ளார். அந்த நேரங்களில் அவருக்கு சில இயக்குநர்கள் கைகொடுத்துள்ளனர். அந்த வகையில் இயக்குநர்கள் பாலச்சந்தர், முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, ஷங்கர் ஆகியோர் தோல்வியில் இருந்து மீண்டு வர உதவியுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது நெல்சன் இணைந்துள்ளார்.

‘ஜெயிலர்’ பார்க்க போன தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ‘ஜெயிலர்’ படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் ஒளிபரப்பப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகையுடன் திருமணமா?; விஷால் விளக்கம்

சமீபத்தில் நடிகர் விஷாலும் நடிகை லஷ்மி மேனனும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், “இந்த தகவல் உண்மையல்ல. ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த வதந்திக்கு நான் விளக்கம் அளிக்கிறேன். நேரம் வரும்போது திருமணம் குறித்து நானே அறிவிக்கிறேன்” என விஷால் விளக்கமளித்துள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய ரோஜா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று, நடிகையும் ஆந்திராவின் அமைச்சருமான ரோஜா, சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் தரிசனம் முடிந்து கோயில் வெளியே வந்தபோது வயதில் மூத்த 2 பெண்கள் பரிசுகள் கொடுத்து அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்க கோரி பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

ஒரு வாரத்தில் தேனாம்பேட்டை போலீசார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

இது எப்படி இருக்கு மனைவி மாமியார் முன்னிலையில் திரிஷாவுடன் படம் பார்த்த தனுஷ்

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை பார்க்க சென்றார்.என்னதான் தன் மாமனார் குடும்பத்தில் பிரச்சனை இருந்தாலும் அதை எல்லாம் கொஞ்சம் கூட நினைத்து பார்க்காமல் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ரஜினியைத் தவிர்த்தாலும், சூப்பர் ஸ்டாரின் முதல் நிகழ்ச்சிக்கு முதல் நாள் ரசிகராக கலந்து கொண்டார் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ் மற்றும் நடிகை த்ரிஷா ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் […]

மீண்டும் சொதப்பினாரா நெல்சன்?

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. நெல்சன் திலிப் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. இதனால் தனது அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்ய ரஜினி நீண்ட நாட்களை எடுத்துக் கொண்டார். கடைசியாக நெல்சன் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே […]

கமலுக்கு ரஜினி அறிவுரை

கமர்சியல் படம் என்ற பெயரில் ஆபாசம் கலக்காமல் படம் எடுக்க வேண்டும். விக்ரம் படத்தை நகலாக எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டாலும், குடும்பத்துடன் ரசிக்கும்படியான படத்தை கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.. விக்ரம் படத்தில் முகம் சுளிக்கும் வகையில் ஆபாச காட்சிகளை திணித்ததற்கு ரஜினி அட்வைஸ்