70 பேர் தேசியக்கொடி வரைந்து உலகசாதனை

சென்னை கோபாலபுரத்தில் உள்ள மேனகா ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் 70 பேர் கொண்ட குழு உலக சாதனை நிகழ்ச்சி ஒன்றினை சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக நூலக வளாகத்தில் நிகழ்த்தியது. ரங்கோலி, கொலாஜ் மற்றும் பெயிண்டிங் என மூன்று வகைகளில் சிறுவர்கள் நடுவயதினர் பெரியவர்கள் என்று மொத்தம் 70 பேர் செங்கோட்டையில் தேசிய கொடி என்ற தலைப்பிலான வண்ண படத்தை 44 நிமிடங்கள் என்ற திட்டமிடப்பட்டு சுமார் 37 நிமிடங்கள் 21 வினாடிகளிலேயே உருவாக்கி உலக சாதனை […]

தேசிய கிக் பாக்சிங் போட்டியில் 2 தங்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு

தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டிகளில் இரட்டை தங்கம் வென்ற தமிழக மாணவி நிவேதா சீனிவாசன் தமிழக அரசு உதவியால் தொடர் சாதனை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி மேற்குவங்காளம் சிலிகுரில் கடந்த ஜூன் 10ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தேசிய அளவிலான ஜினியர் கிக் பாக்சிங் போட்டி நடைபெற்றது. இதில் 27 மாநிலங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக சார்பில் நிவேதா சீனிவாசன் பங்கு பெற்றார. […]

சிபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ 2023-24 ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்தடுத்து வெளியாகியதில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொது தேர்வில் நாடு முழுவதும் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் இதில் சென்னையை பொறுத்த வரை 98.47 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தநிலையில் சென்னையில் […]

598 மதிப்பெண் பெற்று தாம்பரம் மாணவி சாதனை

மதிப்பெண்கள் வாழ்கையின் முடிவல்ல. சாதிக்க பல துறைகள் உள்ளதால் மாணவர்கள் தவறான முடிவுக்கு போக கூடாது. தாம்பரத்தில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 598 எடுத்து சாதித்த மானவி பேட்டி. சென்னை அடுத்த கிழக்கு தாம்பரம் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில் படித்த மாணவி தோஷிதா லட்சுமி பண்ணிரெண்டாம் வகுப்பில் ப்ரென்ச் பாடத்தை முதல் பாடமாக எடுத்து படித்த நிலையில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 600 க்கு 598 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு கல்வி […]

செம்பாக்கம் சீயோன் பள்ளி மாணவி சாதனை 4 பாடத்தில் சதம்

தாம்பரம் அடுத்த செம்பாக்கம் சியோன் பள்ளி மாணவி அபர்ணா வணிகவியல், வணிக கணிதம் பாடப்பிரிவில் 600 க்கு 596 மதிப்பெண் பெற்றுள்ளார். இதில் 4 பாடப்பிரிவில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ்-99ஆங்கிலம்-97வணிகவியல் -100வணிக கணிதம்-100பொருளியல்- 100கண்க்கு பதிவியல்-100மதிப்பெண் பெற்றுள்ள நிலையில் அப்பள்ளி சார்பில் ஆசிரியர்களிடம் ஆசி பெற்றார்.

நீலாங்கரை முதல் மெரினா வரை கடலில் நீந்தி 3 சிறுவர்கள் சாதனை

சென்னையை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த்தனுஸ்ரீ, இவரது மகள் தாரகை ஆராதனா(10), மற்றும் தங்கை மகன்கள் கவி அஸ்வின்(14), நிஷ்விக்(8) ஆகிய மூவரும் கடல் மாசு தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை நீலாங்கரை கடற்கரையில் கடலில் நீந்த துவங்கி சென்னை மெரினா கடற்கரை வரை 20 கி.மீ தூரத்தை 5 மணி நேரம் 25 நிமிடங்களின் கடந்து சாதனை புரிந்தனர். இந்த சாதனையை அசிஸ்ட் வேல்டு ரெக்கர்ட்ஸ் நிறுவனம் சாதனை புத்தகத்தில் இடம் […]

குரோம்பேட்டையில் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

குரோம்பேட்டையில் இயங்கி வரும் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சென்னை மண்டலம் மற்றும் மாவட்டம் சார்பாக நடைப்பெற்ற (டேபிள் டென்னிஸ்) மேசைப் பந்தாட்டம், குண்டு எறிதல், தொடரோட்டம், தடைகளைத் தாண்டி ஓடும் தொடரோட்டம், சிலம்பம், மற்போர் முதலான போட்டிகளில் பங்கேற்று 13 பதக்கங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் மற்றும் இரண்டு மாணவர்கள் மாநில அளவிலான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தமிழக மாணவர் தங்கம் வென்று சாதனை

ஜம்மு காஷ்மீரில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான தேசிய ஜூடோ போட்டியில் சென்னை மாணவர் தர்ஷன் பிரியன் தங்கப்பதக்கமும், அஸ்வின் வெண்கல பதக்கம் வென்றார் வென்று சாதனை கொடுங்கையூர் தனியார் பள்ளி மாணவி செளமியா வெண்கலம் வென்றார்

இருசக்கர வாகனத்தில் தலைகீழாக நின்று ஓட்டி சாதனை

சென்னை அசோக்நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் உதயசந்திரன், இருசக்கர வாகனத்தில் பல்வேறு சாகச சாதனைகளை புரிந்த இவர் இருசக்கர வாகன இருக்கையில் தலைகிழாக நின்றவாறு இயக்கி சாதனை புரிய திட்டமிட்டு தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலையில் சாதனை முயற்சியில் ஒரு கி.மீ தூரம் இருகைகளால் இருசக்கர வாகனத்தை பிடித்தவாறு தலைகவசம் அணிந்த நிலையில் தலையை இருக்கையில் வைத்து கால்களை உயரமாக செங்குத்தாக தூக்கியவாறு ஓட்டிசென்றார். குறிப்பிட்ட இலக்கை அடைந்ததால் சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனையாக […]