சென்னை சோழவரம் அருகே இரண்டு ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

சோழவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்துசரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சுட்டுக்கொலை. அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்ட ரவுடிகள். சென்னை அழைத்து வந்த நிலையில் போலீசாரை தாக்கி தப்ப முயற்ற 2 ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டு கொலை.

தாம்பரம் பாஜக பிரமுகர் கொலையில் 4 பேர் கைது பழிக்கு பழி வாங்க நடந்த கொடூரம்

சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர்காமராஜர் தெருவை சேர்ந்தவர் பீரி வெங்கடேசன் வயது 33 பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் 2015 ஆம் ஆண்டு கொலை வழக்கு உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். பாரதிய ஜனதா கட்சி பெருங்களத்தூர் முடிச்சூர் மண்டல பட்டியல் அணி தலைவராகவும் பொறுப்பில் இருந்தார்.நேற்று முன்தினம் தேதி இரவில் இருந்து இவரை காணவில்லை.இந்நிலையில் நேற்று பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு தலையில் கல்லை […]

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த மும்பையைச் சேர்ந்த விசாரணை கைதி உயிரிழப்பு..!!

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த மும்பையைச் சேர்ந்த விசாரணை கைதி கரேஷ்(35) உயிரிழந்தார். சிறையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் ஸ்டான்லி மருத்துவமனை கொண்டு சென்றபோது வழியிலேயே சுரேஷ் உயிரிழந்தார்.

பல்லடம் அருகே 4 பேர் கொல்லப்பட்ட வழக்கு: தேடப்பட்டு வந்த இருவர் காவல்நிலையத்தில் சரண்

பல்லடம் அருகே 4 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான வெங்கடேஷ், சேனை முத்தையா ஆகியோர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். ஏற்கனவே செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த இருவர் சரணடைந்தனர்.

தாம்பரத்தில் காட்டன் சூதாட்டத்தில் மோதல் 3 பேர் கைது

தாம்பரம், ராஜாஜி ரோடு, ஜி.எஸ்.டி.சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்ட காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் முத்து என்பவரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து 2000 ரூபாய் பணத்தை பறித்து சென்றதாக முத்து என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் செந்தில்குமார், மணிமண்ணன் ஆகியோர் மீது புகார் அளித்தார். அதன் பேரில் தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட காட்டன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை […]