பாலத்தை உடைத்துக் கொண்டு 50 அடி ஆழத்தில் விழுந்த கார்: 2 பேர் உயிரிழப்பு

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை உடைத்துக் கொண்டு கீழே விழுந்து கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் கேரளா மாநிலத்தை சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். விபத்தில் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் கார் முழுமையாக நொறுங்கியது.இந்த விபத்து காரணமாக திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கீழே விழுந்து விபத்தில் சிக்கிய கார் மீட்கப்பட்டு விட்டது. மேலும் விபத்தில் உயிரிழந்த தம்பதியின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக […]

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே அத்திமனம் பகுதியில் 2 அரசு பேருந்துகள், கார், லாரி அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அத்திமனம் என்ற பகுதியில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு 30 நிமிடத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையிலிருந்து திருச்சி நோக்கி செல்லக்கூடிய சாலையில் பெட்ரோல் ஏற்றிவந்த லாரியானது சாலையை வேகமாக கடந்த போது லாரியை பின் தொடர்ந்து வந்த கார் ஆனது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. காரை பின்தொடர்ந்து வந்த இரண்டு அரசு பேருந்துகளும் அடுத்தடுத்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து […]

உளுந்தூர்பேட்டை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே எ.குமாரமங்கலம் பகுதியில் கார் கவிழ்ந்த விபத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் உயிரிழந்தார். சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் திருநாவலூர் வட்டாரக் கல்வி அலுவலர் செல்லின் மேரி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஊரப்பாக்கம் : ஆம்னி பஸ் மீது கார் மோதல் 2 நண்பர்கள் பலி

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே எதிர் திசையில் சென்று ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மறைமலைநகர் அடுத்த பொத்‌தேரி பகுதியை சேர்ந்த தீபக் (23), ரூபேஷ் (24) மற்றும் நவீன் (23) ஆகிய மூவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் தீபக் தனது காரில் நண்பர்கள் மூவருடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஊரப்பாக்கம் அருகே கார் சென்றபோது தீபக்கின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனை தாண்டி எதிர் […]

சென்னை பூந்தமல்லி அருகே கங்குவா படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து

நூலிழையில் உயிர் தப்பினார், நடிகர் சூர்யா பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சண்டை காட்சி தொடர்பான படப்பிடிப்பின் போது விபத்து ரோப் கேமரா அறுந்து விழுந்த நிலையில், படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தி வைப்பு நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்பிடிப்பின் போது கிரேன் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

பல்லாவரம் ரேடியல் சாலையில் கார் மோதி காவலாளி பலி

சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (72) அப்பகுதியில் செக்யூரிட்டி வேலை பார்த்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக பல்லாவரம் ,துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக தனது சைக்காலில் ஐயப்பன் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த வாடகை கார் மோதியதில் தூக்கி வீசாபட்ட முதியவரின் இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் பலத்தகாயமடைந்த முதியவரை மட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு […]

படிப்புக்காக உணவு விநியோகம்: பல்லாவரம் மாணவர் விபத்தில் உயிரிழப்பு

பல்லாவரம் அடுத்த அனகாபுத்துரை சேர்ந்த கல்லூரி மாணவர் மகேஸ்வரன்(19), சேலையூர் பாரத் கல்லூரியில் மெக்கனிக்கல் இஞ்னியரிங் முதலாமாண்டு படித்து வந்தார். குடும்ப சூழல் காரணமாக பகுதி நேரமாக ஆன்லைன் ஆப் மூலம் உணவு விநியோகம் செய்தார். நேற்று இரவு 10.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் குரோம்பேட்டை சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கிவிசப்பட்ட மகேஸ்வரன் தலையில் பலத்தகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு […]