கண் சிகிச்சைக்கு சென்ற 72 வயது முதியவர் விபத்தில் பலி

மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில் இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கரவானம் மோதியதில் கீழே விழுந்த பல்லாவரத்தை சேர்ந்த 72 வயது முதியவர் தாமோதரன்(75) உயிரிழப்பு, கண் பரிசோதனை செய்திட பேரன் கரணின் இருசக்கர வாகனத்தில் சென்னை நோக்கி இருசக்கரவாகனத்தில் பின்னார் அமர்ந்து சென்றபோது விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்..

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட சரக்கு ரயிலால் தண்டவாளம் உடைந்ததால், புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரம்

9 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், முதற் கட்டமாக நான்கு பெட்டிகளை அகற்றம். துண்டு துண்டுகளாக உடைந்த தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய தண்டவாளத்தை அமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது

10-க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. அதை சீர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்களும் தாமதம்

விருதுநகர்-மதுரை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது

இதில் பயணம் செய்த பயிற்சி மருத்துவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கேரளா மாநிலம் காவநாத் மாவட்டம், கேரா நகரைச் சேர்ந்தவர் சாமுவேல்ஜோஸ் (21). இவர், புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லுரியில் எம்.பி.பி.எஸ் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அவர் காரில், திருவனந்தபுரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார் .விருதுநகர் வடமலைக்குறிச்சி சந்திப்பு அருகே வந்தபோது, காரின் டயர் திடீரென பஞ்சர் ஆகியதாக கூறப்படுகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த […]

விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் தொப்பம்பட்டி நெடுஞ்சாலையில் மாம்பாறை முனியப்பன் கோவிலுக்கு சென்று விட்டு தொப்பம்பட்டிக்கு சென்ற கார் முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்லும்போது நிலை தடுமாறி வலது புறத்தில் உள்ள பயணிகள் நிழல் குடையில் மோதி விபத்து காரில் பயணம் செய்த சண்முகசுந்தரம், தமிழரசன், கனீஸ்வரன் ஆகிய மூன்று பேர் உயிரிழப்பு விபத்து குறித்து போலீசார் விசாரணை.

இரு சக்கர வாகனம் மீது மோதிய லாரி.. சிலம்ப பயிற்சியாளர் பலியான நிலையில் மற்றொருவர் படுகாயம் .!

திருச்சி மாவட்டம் பீமநகரில் சிலம்ப பயிற்சியாளர்கலான சிவராமன் மற்றும் ஜெயகுமாா் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விராலிமலை பகுதி மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி அளிப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு சென்றடைந்த பயிற்சியாளர்கள் மாணவர்களுக்கு சிலம்பம் கற்று கொடுத்த பின் வீட்டிற்கு செல்வதற்காக இருவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்களது இரு சக்கர வாகனத்தின் மீது எதிரே […]

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பைனான்சியர் பலி

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் செல்லத்துரை(60). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் செல்லத்துரை சம்பவத்தன்று ஓட்டப்பிடாரம் பஜார் பகுதியில் பண வசூலுக்காக சென்றுள்ளார். இதனை தொடர்ந்து செல்லத்துரை பஜாரில் வசூலை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக அங்கிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி செல்லத்துரையின் இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதனால் நிலை தடுமாறிய செல்லத்துரை வாகனத்திலிருந்து கீழே […]

2022ல் சாலை விபத்துகளில் 1.6 லட்சம் பேர் பலி: 2வது இடத்தில் தமிழகம்

புதுடில்லி: கடந்த 2022ம் ஆண்டு நாடு முழுவதும் 1.6 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். அதிக விபத்துகள் நடந்த மாநிலங்களில், உ.பி., முதலிடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: கடந்தாண்டு சாலை விபத்துகளில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2021ல் 1,53,972 ஆகவும், 2020ல் 1,38,383 ஆகவும் இருந்தது. அதேபோல், 2022ல் 4,61,312, 2021ல் […]