நங்கநல்லூர் கோவில் விபத்தில் காயம் அடைந்த பலி

நங்கநல்லூரில் உள்ள கோவிலை 5 அடி உயரத்திற்கு ஜாக்கி மூலம் தூக்கி நிறுத்தும் பணியின்போது கோவில் சரிந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய நபர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். உண்மையை மறைத்து லேசான காயம் என போலீசாருக்கு தகவல் அளித்த கோவில் நிர்வாகியிடம் போலீசார் விசாரணை சென்னை நங்கநல்லுார், ராம்நகரில் உத்தர குருவாயூரப்பன் கோவில் உள்ளது. இந்த கோயில் சாலையை விட மிகவும் தாழ்ந்து காணப்படுவதால் மழைகாலங்களில் நீர் உட்புகுந்து பெரும் பாதிப்பை ஏற்பட்டது. இதனையடுத்து புதிய தொழில்நுட்ப முறையில் […]

கொசுவத்தியால் தீ விபத்து மேடவாக்கத்தில் முதியவர் கருகி சாவு

மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (70) கார்பெண்டரான இவர் அப்பகுதியில் கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து வந்துள்ளார். நேற்று இரவு முதியவர் ராஜமாணிக்கம் வசித்து வந்த வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக பள்ளிகரனை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைத்த பின்பு பார்த்த போது படுக்கையில் ராஜமாணிக்கம் உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக […]

உளுந்தூர் பேட்டை அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் காவலர் பாலமுருகன் மற்றும் அவரது மனைவி வினோதினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

4 பேர் படுகாயமடைந்தனர். காரின் வலது பக்க டயர் வெடித்ததில் கட்டுபாட்டை இழந்த கார் எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

உச்சிப்புளி அருகேயுள்ள ஊருணியில் குளிக்கச் சென்ற அண்ணன், தம்பி நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே இருட்டூரணி குடியிருப்பைச் சோ்ந்தவா் சந்திரன். இவரது மூத்த மகன் தருண் பாலா (10), இங்குள்ள தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பும், இளைய மகன் சாருகேஷ் (8) மூன்றாம் வகுப்பும் படித்து வந்தனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அவா்கள் இருவரும், அந்தப் பகுதியில் உள்ள ஊருணியில் குளிக்கச் சென்றனா். ஆழமான பகுதிக்குச் சென்ற இருவரும் நீரில் மூழ்கினா். இதைப் பாா்த்த அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் இருவரையும் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு […]

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட இன்ஜின்

சேத்துப்பட்டு ரயில் பணிமனையில் இருந்த பெட்டிகளை இழுத்து செல்ல வந்த இன்ஜின் எழும்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான ரயில் இன்ஜின் தடம் புரண்ட ரயில் இன்ஜினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய 3 சக்கரங்களை சீரமைக்கும் பணி தீவிரம்.

வண்டலூரில் தண்டவாளத்தை கடந்தவர் ரெயில் மோதி பலி

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர், ஊரப்பாக்கம் ரயில் நிலையம் இடையே நேற்று நள்ளிரவு ஆண் ஒருவர் தலையில் பலத்தகாயங்ககுடன் சடலமாக கிடப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் ரயில்வே தண்டவாளத்தில் இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நடத்திய விசாரனையில் அந்த நபர் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த சரவணன் என்பதும் தண்டவாளத்தை கவனகுறைவாக கடந்த போது எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற விரைவு […]

குழந்தைகள் மீது கட்டிடத்தின் ஓடுகள் விழுந்து விபத்து

திருவள்ளூர், சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் மீது கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்து விபத்து மதிய உணவு அருந்தும் போது பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகளுக்கு தலையில் பலத்த காயம்

8 வது மாடியில் இருந்து 2 வது மாடிக்கு தவறி விழுந்த குழந்தை பலி

நாவலூரில் 8 வது மாடியில், 3 வயது ஆண் குழந்தை, 2வது மாடிக்கு தவறி விழுந்து உயிரிழந்தது. திருப்போரூர் அடுத்த நாவலூரில், ஓ.எம்.ஆர், சாலை ஒட்டி 20 அடுக்குகொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 5 வது மாடியில் வசிப்பவர் மணிகண்டன் 33. இவரது மனைவி ஜிஜி, தம்பதிக்கு ஆரோவ், 3 , என்ற ஆண் குழந்தை இருந்தது. தம்பதி இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு தம்பதிகள் குழந்தையுடன் […]

தமிழகம் தந்தை கண்முன்னே உயிரிழந்த சோகம்!: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பரிதாப பலி..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை கண் முன்னே, தலை நசுங்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் காவிரிகாட்டூர் சொக்கலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம். இவரது பெண் குழந்தை ஜனுஷிகா. வயது 8. இவர் வயலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். தினசரி ஜனுஷிகா அவரது தாயாருடன் பள்ளிக்கு செல்வது வழக்கம். ஆனால் சிறுமியின் […]

பெருங்களத்தூரில் கொத்தனார் பலி

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கொத்தனார் பிச்சமுத்து (50) தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று வழக்கம் போல் மூன்றாவது தளத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது கால் தவறி முப்பது அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதனை கண்ட சக தொழிலாளர்கள் உடனடியாக பலத்த காயமடைந்த பிச்சமுத்துவை அவசர ஊர்தி மூலம் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை […]