செல்போன் விபரீதம் பெருங்களத்தூரில் ரெயில் மோதி பெண் இன்ஜினியர் பலி

பெருங்களத்தூரில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் ஐ.டி பொறியாளர் மீது அந்தியோதையா விரைவு ரெயில் மோதி உயிரிழப்பு ஆந்திராவை சேர்ந்த பெண் மென் பொறியாளர் பிள்ளி தாரணி சத்தியா(23) சென்னையை அடுத்த பெருங்களத்தூர் உள்ள ஐ.டி கம்பெணியில் பணி செய்கிறார். இன்று காலை பெருங்களத்தூர ரெயில் கேட் அருகே செல்போனில் பேசியபடி சென்ற தண்டவாளத்தை கடந்தபோது திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் நோக்கிவந்த அந்தியோதைய விரைவு ரெயில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பிரேதத்தை கைப்பற்றி தாம்பரம் […]

மாடி குடியிருப்பில் விளக்கை அணைக்க தாவிய காவலாளி தவறி விழுந்து பலி

தாம்பரம் அருகே குடியிருப்பு மாடிகளில் உள்ள மின் விளக்குகளை அனைப்பதற்காக மாடி விட்டு மாடி தாவிய வடமாநில இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேப்பாளம் மாநிலத்தை சேர்ந்தவர் பிரேம் கட்டி (33) கடந்த ஒன்பது வருடங்களாக தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் நுதஞ்சேரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியுருப்பில் ஒன்பது வருடங்களாக செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வழக்காம அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ள முதல் மாடி மின் விளக்குகளை மாடி […]

திருப்பதி அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்

நெல்லூர் இந்துகூர்பேட்டையைச் சேர்ந்தவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுவிட்டு காணிப்பாக்கம் சென்றபோது விபத்து ஏற்பட்டது. சந்திரகிரி எம்.கொங்கரவாரிப்பள்ளி அருகே சித்தூர்-நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணித்த 2 பேர் பலத்த காயம்; – கவலைக்கிடமான நிலையில் ஒருவர் திருப்பதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போதையில் கார் ஓட்டி 2 பேர் பலியான விவகாரத்தில் சிறுவனின் தந்தை உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தபட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

புனேவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்களான அனிஷ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா இருவரும் ஓட்டலுக்கு சென்று விட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.சுமார் 3 மணி அளவில் கல்யாணிநகர் பகுதியில் பைக் சென்று கொண்டிருந்த போது அதே சாலையில் வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் மற்றொரு கார் மீது விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டிய […]

குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் திருமண கோஷ்டி வேன் கவிழ்ந்து விபத்து

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர்களின் வேன் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் உட்பட வேனில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சேலத்தில் இருந்து சென்னை எழுப்பூரில் நடைபெறும் திருமணத்திற்க்காக 12 பேர் மஹேந்திரா டூரிஸ்டர் வேன் ஒன்றில் ஜி.எஸ்.டி சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர் வேனை சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜெய் சாந்த் (24) ஓட்டி வந்துள்ளார். அப்போது குரோம்பேட்டை ,எம்.ஐ.டி மேம்பாலம் அருகே வேனின் டயர் திடிரென வெடித்ததால் சாலையில் இருந்த தடுப்பு […]

சித்தாலப்பாக்கத்தில் மின்வாரிய அதிகாரி விபத்தில் உயிரிழப்பு

மடிப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின்வாரிய உதவி இயக்குனர் பலி சென்னையை அடுத்த மடிப்பாக்கம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் கோபால் இவரது மகன் செந்தில்குமார்(46). இவர் சித்தாலப்பாக்கம் மின்சார வாரிய உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இன்று இரவு மேடவாக்கம்-பரங்கிமலை சாலையில் இருந்து மடிப்பாக்கம் சபரி சாலை வழியாக வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில்(TN 32 L 8427 HONDA SHINE ) சென்றுக் கொண்டு இருந்தார். அப்போது பின்புறம் […]

செங்கல்பட்டு சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

அடுத்தடுத்து வாகனங்கள் சரமாரியாக ஜிஎஸ்டி சாலையில் மோதியதால் பரபரப்பு. செங்கல்பட்டு அருகே சென்னை நோக்கி வந்த லாரி, ஆம்னி பேருந்து, அரசுப் பேருந்து மோதியது. ஒன்றன்பின் ஒன்று மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி, பலர் படுகாயமடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஒரகடம் அருகே சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்

நாமக்கல் மாவட்டம், முசறி அடுத்த கண்டிப்பாளையம் பகுதியை சோ்ந்தவா் கோகுல்ராஜ் (26). புதுக்கோட்டை மாவட்டம், காத்தான்விடுதி கிராமத்தை சோ்ந்தவா் முருகானந்தம் (26). இவா்கள் இருவரும் தண்டலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, கோகுல்ராஜ் ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் காா் தொழிற்சாலையிலும், முருகானந்தம் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையிலும் பணியாற்றி வந்துள்ளனா். இந்த நிலையில், கோகுல்ராஜ் மற்றும் முருகானந்தம் ஆகிய இருவரும் சனிக்கிழமை இரவு காஞ்சிபுரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் […]

குரோம்பேட்டை ஏ.டி.எம். காவலாளி மினி வேன் மோதி பலி

தாம்பரம் அருகே நெஞ்சக மருத்துவமனை எதிரில் சாலையை கடக்க முயன்ற காவலாளி மீது மினி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டை மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் சேர்ந்தவர் பெருமாள் (77) தாம்பரத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம் மில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு தாம்பரம் சானடோரியம் நெஞ்சக நோய் மருத்துவமனை எதிரே சாலையை கடக்க முயன்ற போது பல்லாவத்தில் இருந்து தாம்பரம் நோக்கி அதிவேகமாக […]

ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு

வளைகாப்பிற்காக சென்னையில் இருந்து தென்காசிக்கு ரயிலில் சென்ற 7 மாத கர்ப்பிணி கஸ்தூரி (21) தவறி விழுந்து உயிரிழப்பு வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்த விபரீதம் அபாய சங்கிலி வேலை செய்யாததால் அடுத்த பெட்டியில் இருந்து குடும்பத்தினர் அபாய சங்கிலியை இழுத்த நிலையில், ரயில் 8 கி.மீ. தொலைவு கடந்து விட்டதால் உடலை தேடி எடுப்பதற்கு 3 மணி நேரமானது