தாம்பரம் அருகே ஒரே இரவில் இரண்டு பேர் விபத்தில் பலி

தாம்பரம் அருகே ஒரே இரவில் நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்க்கு சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35) தனியார் உணவு நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு தாம்பரம் , வேளச்சேரி வழியாக சென்று கொண்டிருந்த போது கேம்ப்ரோடு அருகே பின்னல் கும்பகோணத்தில் இருந்து அதே மார்க்கத்தில் செந்தில்குமார் […]
கனமழை எதிரொலி கார் விற்பனை மைய சுவர் இடிந்தது

இரவு பெய்த கனமழையால் கோவிலம்பாக்கத்தில் டாடா கார் விற்பனை மையம் சுற்றுசுவர் சாலையில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு இரவு சென்னை புறநகர் பகுதியுல் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்த நிலையில் கோவிலம்பாக்கத்தில் டாடா கார் விற்பனை நிலைய பின்பக்கத்தில் 6 உயரம், 60 நிலமுள்ள சுற்றுசுவர் அடியோடு பெயந்து அருகில் உள்ள சாலையில் விழுந்தது. இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. கோவிலம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் இதுவரை அகற்றும் பணியில் ஈடுபடவில்லை.
வேளச்சேரியில் பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு

வேளச்சேரியில் இருசக்கர வானம் மீது தனியார் நிறுவன பேரூந்து மோதியதில் இளைஞர் பலி சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிவாசன்(19) வேளச்சேரி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மோதிய நிலையில் இருசக்கர வாகனம் பேரூந்து கீழே சிக்கியது. இதில் ஜோதிவாசன் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். போக்குவரத்து புலனாய்வு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்:

பிரதமர் மோடி அறிவிப்பு
ரயில் விபத்து – அவசர கால எண்கள் அறிவிப்பு
5 பேர் உயிரிழப்பு மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை ரயில்வே துறை அறிவித்துள்ளது 033-23508794, 033-23833326 என்ற அவசர கால எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு Sealdah Station033-23508794033-23833326 GHY Station036127316210361273162203612731623 KIR Station6287801805 Katihar Station090020419529771441956 LMG Station0367426395803674263831036742631200367426312603674263858
நியூ ஜல்பைகுரி ரயில் விபத்து – ரயில்வே அமைச்சர் பதிவு

“எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடக்கின்றன. ரயில்வே, NDRF மற்றும் SDRF ஆகியவை ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்”
முடிச்சூரில் மகன் கண் முன்பே பெண் லாரி மோதி உயிரிழப்பு

தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் டாரஸ் லாரி மோதி பெண் உயிரிழப்பு மகன் கண் முன்னே பரிதாபம், இருசக்கர வாகனத்தில் மருத்துவமனை சென்று வீடுதிரும்பியபோது ஏற்பட்ட விபத்தால் சோகம் தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் மா.போ.சி தெருவை சேர்ந்தவர் விஜயா(58) உடல் நிலை சரியில்லாததால் மகன் நாகராஜனுடன் இருசக்கர வாகனத்தில் காட்டாங்குளத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு முடிச்சூர் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டு இருந்தபோது, அதே மார்கத்தில் சென்ற டாரஸ் லாரியின் இடது புறத்தில் முன்னே […]
பல்லாவரம் உணவகத்தில் அடுத்தடுத்து ஷாக் : மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி

சென்னையில் தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மூவருக்கு அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்த நிலையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு. சென்னை துரைப்பாக்கம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் உதவியாளர் மற்றும் ஹவுஸ் கீப்பிங் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் உணவகத்தை மூடுவதற்கு முன்பு உயிரிழந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான தன்குமார், 22 […]
தாம்பரத்தில் பரபப்பு: பெண் இன்ஸ்பெக்டர் சென்ற வாகனத்தின் டயர் கழன்று ஓடியது

தாம்பரத்தில் பெண் காவல் ஆய்வாளர் சென்ற காவல்துறை வாகனத்தின் டயர் கயன்று ஓடியதால் பரபரப்பு நல்வாய்பாக உயிர் தப்பித்து உள்ளோம் என புலம்பிய ஆய்வாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர், ஜெயலட்சுமி இவர் வழக்கம் போல் நேற்று இரவு பணியை முடித்து விட்டு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள காவல்துறை (டாட்டா சுமோ) வாகனத்தில் மயிலாப்பூரில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டிற்கு புறப்பட்டார். காரை […]
பல்லாவரம் அருகே லாரி மோதி ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழப்பு

பல்லாவரம் அருகே சிமெண்ட் கலவை லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பலியானர், மற்றொருவர் படுகாயம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துவேல்( 25). இவர் பல்லாவரம் பகுதியில் தங்கி சென்னையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை முத்துவேல் தனது நண்பரான தேவா (31) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திருநீர்மலை ஜி.எஸ்.டி சாலை இணைக்கும் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் […]