சேலையூர் ஆவின் பாலகம் சூறையாடல். சிசிடிவி கட்சியால் பரபரப்பு

தாம்பரம் அருகே ஆவின் பாலகத்தில் சிலர் தகராறில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு தாம்பரம், சேலையூர், மப்பேடு சந்திப்பு பகுதியில் ஆவின் பாலகம் நடத்தி வருபவர் சண்முகவள்ளி நேற்று இரவு 8.00மணியளவில் பால் வாங்குவதற்க்கு வந்த அரவிந்தன் என்பவர் தனது வீட்டிற்க்கு பால் வரவில்லை என்று கடையில் வேலை பார்க்கும் சாத்தையாவிடம் தனது நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கடையில் இருந்த பொருட்களை அரவிந்தனின் நண்பர் ஒருவர் தூக்கி வீசியதும் சாத்தையா கையெடுத்து […]

ஆவின் பால் கொள்முதல் விலையை ₹3 உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ₹35ல் இருந்து ₹38-ஆக உயர்வுஎருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ₹44ல் இருந்து ₹47-ஆக உயர்வுகொள்முதல் விலை உயர்வு மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

24 மணி நேரமும் ஆவின் பால் விற்பனை

சென்னையில் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய 24 மணி நேரமும் ஆவின் பால் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது! அம்பத்தூர், மாதவரம், அண்ணா நகர், பெசண்ட் நகர், அண்ணா நகர் கிழக்கு, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது! ஆவின் பால், பால் பவுடர் மற்றும் பால் உப பொருட்கள் எப்போதும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு!

ஆவின் ஸ்டாண்டர்ட் எனப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்

முன்பு இருந்தது போலவே 4.5% கொழுப்புச் சத்தும் மற்றும் 8.5% இதர சத்துக்களுடன் விற்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டை திடீரென்று நிறுத்திவிட்டு ஊதா நிறத்தில் பால் பாக்கெட்டை ஆவின் அண்மையில் அறிமுகம் செய்தது. இதில் கொழுப்புச் சத்தின் அளவும் 3.5% ஆக குறைக்கப்பட்டது. ஆனால் பச்சை நிற பாக்கெட்டின் விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி திமுக அரசு பாலில் கொழுப்புச் சத்தை குறைத்து வழக்கம்போல் விஞ்ஞான […]

பொதுமக்கள் அதிகளவு விரும்பி பருகும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை திடீரென நிறுத்த முடிவு செய்திருக்கும் ஆவின் நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது

பொதுமக்கள் விரும்பும் அனைத்து வகையான பால் பாக்கெட்டுகளையும் விற்பனை செய்வதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். குறைந்து வரும் பால் கொள்முதல், ஊழல், முறைகேடு என பல புகார்களில் சிக்கித் தவிக்கும் ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை போக்க, 4.5 சதவிகித கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5 சதவிகித கொழுப்புச் சத்துள்ள ஊதா நிற பால் பாக்கெட்டை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக ஊடகங்களிலும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. […]

“இரண்டாவது நாளாக எடையளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம்”

சென்னை, மாதவரம் ஆவின் பால் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு, திங்கட்கிழமை (09.10.2023) அன்று வடசென்னை பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஊதா நிற “ஆவின் டிலைட் பால்” பாக்கெட்டுகள் 100கிராம் எடை குறைவாக (415கிராம்) வந்த 24மணி நேரத்திற்குள் மற்றொரு பேரதிர்ச்சியாக இன்று (10.10.2023) அதிகாலை மத்தியச் சென்னை பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டில் 135கிராம் எடை குறைவான (385கிராம்) பால் பாக்கெட்டுகள் வந்திருப்பது பால் முகவர்கள் மற்றும் பொதுமக்களிடையே […]

ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 100.00ரூபாய் உயர்த்தி, தனது முந்தைய சாதனையை தானே முறியடித்தது திமுக அரசு.”-இது மக்களுக்கான அரசா..?, மக்கள் விரோத அரசா..?

தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காமல் பால் மற்றும் நெய், வெண்ணெய், பனீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பால் உபபொருட்களின் விற்பனை விலையை மறைமுகமாகவும், நேரடியாகவும் உயர்த்தி பொதுமக்கள் தலையில் மிகப்பெரிய அளவில் பாரத்தை சுமத்துவதையே தொடர் வாடிக்கையாக கொண்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்களுக்கு மேலும் பேரதிர்ச்சி தரக்கூடிய வகையில் ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விற்பனை விலையை வரலாறு காணாத வகையில் கூட்டுறவு […]

“பால் முகவர்களை மிரட்டுவதை கைவிடா விட்டால் ஆவின் பாலகங்கள் அமுல் பாலகங்களாக மாற்றப்படும்”

-ஆவின் நிர்வாகத்திற்கு பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை. ஆவினில் அதிகம் விற்பனையாகும், பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கக் கூடிய நெய், வெண்ணெய், பனீர், பாதாம் மிக்ஸ் போன்ற பால் பொருட்களின் உற்பத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக பால் கொள்முதல் கடும் வீழ்ச்சியடைந்த காரணத்தால் அவற்றின் உற்பத்தியும் முற்றிலுமாக முடங்கிப் போனது. இதனால் தமிழகம் முழுவதும் ஆவின் பாலகங்கள் நடத்தும் பால் முகவர்களுக்கு தினசரி அதிகளவில் விற்பனையாகும், பொதுமக்கள் விரும்பி வாங்கக் கூடிய நெய், வெண்ணெய், பனீர், பாதாம் […]

“ஆவின் பாலுக்கு மீண்டும் தட்டுப்பாடு, திட்டமிட்டு அமுல்படுத்துகிறது ஆவின் நிர்வாகம்”

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் தமிழகம் முழுவதும் தினசரி சுமார் 29லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அதில் 50% அதாவது 14.5லட்சம் லிட்டர் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலேயே விற்பனை செய்யப்பட்டு விடுகிறது. மேலும் கடந்த 2021ம் ஆண்டுக்கு முன்பிருந்த தினசரி பால் கொள்முதல் சுமார் 38லட்சம் முதல் 42லட்சம் லிட்டர் என்கிற நிலையில் இருந்து ஆவடி சா.மு.நாசர் அவர்கள் பால்வளத்துறை அமைச்சராக […]