மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஊழியர் பணியிடை நீக்கம்

அரசு நிர்வாகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஊழியர்களின் மீது அடக்குமுறையை கையாளும் திமுக அரசின் அதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. உசிலம்பட்டி தாலுக்கா கோப்பம்பட்டி மொத்த பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து மதுரை ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட பாலில் தண்ணீர் கலப்படம் செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆவின் பால் குளிரூட்டும் மையங்களில் நடக்கும் தண்ணீர் கலப்படம் தொடர்பாக எழுந்த புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆவின் […]
ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 100.00ரூபாய் உயர்த்தி, தனது முந்தைய சாதனையை தானே முறியடித்தது திமுக அரசு.”-இது மக்களுக்கான அரசா..?, மக்கள் விரோத அரசா..?

தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காமல் பால் மற்றும் நெய், வெண்ணெய், பனீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பால் உபபொருட்களின் விற்பனை விலையை மறைமுகமாகவும், நேரடியாகவும் உயர்த்தி பொதுமக்கள் தலையில் மிகப்பெரிய அளவில் பாரத்தை சுமத்துவதையே தொடர் வாடிக்கையாக கொண்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்களுக்கு மேலும் பேரதிர்ச்சி தரக்கூடிய வகையில் ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விற்பனை விலையை வரலாறு காணாத வகையில் கூட்டுறவு […]
புதிய ஆவின் நிலையம் – விண்ணப்பிக்கலாம்

சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய ஆவின் பாலகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம். புதிய வகை ஆவின் சில்லறை விற்பனை நிலையங்கள் அமைக்க உள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பு.
ஆவின் பால் விலை மீண்டும் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ. 10 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ. 210க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூ. 10 அதிகரித்து ரூ. 220க்கு விற்பனையாகிறது
ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் வாங்கும் வாடிக்கையாளா்கள் ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மாதாந்திர பால் அட்டைகள் மூலம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது போலி மாதாந்திர பால் அட்டைகள் அதிகளவில் நடமாடுவதாக அதிகாரிகளுக்கு புகாா் வந்தது. இதையடுத்து அவற்றை அடையாளம் கண்டு அகற்றும் பணியில் ஆவின் நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதைத்தொடா்ந்து, ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை வாங்கும் வாடிக்கையாளா்கள் ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாடிக்கையாளா்கள் குடும்ப அட்டை அல்லது வீட்டு வாடகை […]