ஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும்?

காவிரியை வழிபட்டு அனைத்து நலன் களையும் பெறுவதற்கு இந்த ஆடிப்பெருக்கு தினத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ‘கணவன் நோய்நொடி இல்லாமல் இருக்க வேண்டும்… தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும்’ என்று காவிரித் தாயை வணங்குவார்கள் மணமான பெண்கள்.திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு திருமண வரம் வேண்டி, காவிரியைப் பிரார்த்திப்பார்கள். புதுமணம் ஆன பெண்கள் தாலி பிரித்து, புதுத் தாலி முடிந்து கொள்வார்கள். வயது முதிர்ந்த சுமங்கலி, புதுத் தாலி எடுத்துத் தருவார். […]