திருநங்கைகள் ஒன்று கூடி நடத்திய ஆடித் திருவிழா

தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய பதினாறாம் ஆண்டு ஆடி திருவிழா கடந்த 21 தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கூழ்வார்க்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை தலையில் கிரகமாக எடுத்து அப்பகுதியில் ஊர்வலம் கொண்டுவரப்பட்ட திருநங்கைகள் பலர் அம்மனுக்கு அழகு குத்தி வழிபட்டனர். ஊர்வலமாக சென்ற கரகம் பின்பு ஆலயம் வந்தடைந்தது. அங்கு பம்பை உடுக்கை சத்தங்கள் முழங்க திருநங்கை ஒருவர் சாமியாடியது அங்கு […]

குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் ஸ்ரீ விஜயகணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் பெருமாள் சன்னதியில் ஆடிப்பூரத் திருவிழா

குரோம்பேட்டை புருஷோத்தம நகர் அருள்மிகு ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபா தாரனை செய்யப்பட்டு முழுவதும் வளையல் பந்தல் அமைக்கப்பட்டு அம்மனுக்கு வளையல் சாற்றி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மேலும் லட்சுமி நாராயண பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருமஞ்சனம் வெகு விமர்சையாக நடந்தபோது எடுத்தபடம்.

குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் ஸ்ரீ விஜயகணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் ஆடிப்பூரத் திருவிழா

குரோம்பேட்டை புருஷோத்தம நகர் அருள்மிகு ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபா தாரனை செய்யப்பட்டு முழுவதும் வளையல் பந்தல் அமைக்கப்பட்டு அம்மனுக்கு வளையல் சாற்றி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் லட்சுமி நாராயண பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருமஞ்சனம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

குரோம்பேட்டை பத்மநாப நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன் சிறப்பு வளையல் அலங்காரத்தில் காட்சி

குரோம்பேட்டை பத்மநாப நகர் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் ஆடிவார முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாதாரணை செய்யப்பட்டது. மாலையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ கருமாரியம்மன் வளையலால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத் திருவிழாவில் ஐந்து கருடசேவை கோலாகலமாக நடைபெற்றது.

குழந்தைப்பேறு.. அருள் தரும் ஆடிப்பூரம்

ஆடி மாதத்தில் வரும் இந்த ஆடிப்பூர நட்சத்திர தினத்திலே சக்தியாகிய உமாதேவி அவதரித்ததாக சிவபுராணம் கூறுகிறது. மேலும், இதே ஆடிப்பூர நாளில்தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் பூமாதேவியே ஆண்டாளாக அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகிறது. இதன் காரணமாகவே, ஆடிப்பூர நாளை சைவ மற்றும் வைணவ தலங்களில் சிறப்பாகவே கொண்டாடுகின்றனர். இதே ஆடிப்பூர நாளில்தான் சித்தர்களும், முனிவர்களும் தங்களது தவத்தை தொடங்குவார்கள் என்று ஆன்மிக அறிஞர்களும் தெரிவிக்கின்றனர். இந்த ஆடிப்பூரமானது அம்பாளுக்குரிய நாள் ஆகும்.ஆடிப்பூர தினத்தில் அம்மனை வழிபடும் […]

ஆடி மாதத்தில் வரும் 2 அமாவாசைகள் : எந்த நாளில் ஆடி அமாவாசை விரதம் கடைபிடிக்க வேண்டும்?

ஆடி மாதம் சுப காரியங்களை தவிர்க்க வேண்டிய மாதம் என்பார்கள். இது தேவர்களின் இரவு பொழுது என்பதால் அவர்களுக்கான பூஜைகளை ஏற்றுக் கொண்டு ஆசிகளை வழங்குவதற்கு அவர்கள் வர மாட்டார்கள். அதனாலேயே இந்த மாதத்தில் திருமணங்கள் போன்ற சுப காரியங்கள் தவிர்க்கப்படுகின்றன. அதே சமயம் ஆடி மாதம் வழிபாட்டிற்கு உரிய மிக முக்கியமான புண்ணிய மாதமாக கருதப்படுகிறது. அம்மன் அருளையும், முன்னோர்களையும் ஆசியையும் பெற ஏற்ற மாதமாகும்.ஆடி மாதத்தில் பலர் விரதம் இருந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது வழக்கம். […]

ஆடி மாதத்தில் வரும் அம்மனுக்கு உகந்த விரத வழிபாடுகள்…

ஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். ஆடி தபசு ஒரு முறை அம்பாள், சிவபெருமானிடம் ஒரு வரம் கேட்டாள். அதாவது விஷ்ணுவுடன் இணைந்து காட்சி தர வேண்டும் என்பது அவளது கோரிக்கை. உடனே சிவபெருமான், “பொதிகை மலையில் புன்னை வனத்தில் தவம் புரிந்தால் அந்தக் காட்சி காணக்கிடைக்கும்” என்றார். அம்பாளும் ஒற்றைக்காலில் ஊசிமுனையில் நின்று தவம் […]