பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை நாளை கோவையில் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம்.
ஆதார் கார்டு இலவச அப்டேட்.. இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு.. உடனே அப்டேட் பண்ணுங்க..!

ஆதார் இலவச அப்டேட் காலக்கெடு தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் ஆதாரை இந்த தேதி வரை இலவசமாக புதுப்பிக்கலாம், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டின் கடைசி மாதம் நடந்து கொண்டிருக்கிறது மேலும் 2023 டிசம்பரில் பல முக்கியமான பணிகளை முடிப்பதற்கான காலக்கெடுவும் ஆகும். வங்கி லாக்கர் ஒப்பந்தம் முதல் புதுப்பிக்கப்பட்ட ஐடிஆரைச் சமர்ப்பிப்பது வரையிலான பணிகள் இதில் அடங்கும். இது டிசம்பர் 31க்குள் முடிக்கப்படும். ஆதாரை இலவசமாக புதுப்பிக்கும் வசதியை UIDAI மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. […]
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு 6 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழக மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கு அரசு வழங்கும் மானியத்தை பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஒரு மின் இணைப்பிற்கு ஒரு ஆதார் எண்ணை மட்டுமே இணைக்க முடியும் என்றும், வாடகை […]
செப்.14 வரை மட்டுமே ஆன்லைனில் ஆதார் அப்டேட் இலவசம்: நெருங்கும் கெடு தேதி!

வரும் 14-ம் தேதி வரையில் மட்டுமே ஆன்லைன் வழியே பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை ஆதார் அட்டை பயனர்கள் இலவசமாக புதுப்பிக்க முடியும். அதன்பிறகு அந்த சேவைக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிப்பது அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தது. அரசின் டேட்டாபேஸில் துல்லியத் தரவுகள் வேண்டி […]
ஆதார் அட்டை இருக்கா? உஷார்!

ஆதார் மூலம் பணத்தை திருடும் கும்பல் அதிகரித்து வருவதாக UIDAI எச்சரித்துள்ளது. உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக பொய் சொல்லி மோசடிக்காரர்கள் ஒரு லிங்க்-ஐ அனுப்புவார்கள். அதில் உங்களது ஆதார் எண்ணை உள்ளிடும்போது அதனை வைத்து மோசடி நடைபெறுகிறது. உங்களது ஆதார் எண்ணை கேட்டு வரும் மெயில் மற்றும் SMSகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று UIDAI கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு தேர்தல் ஆணைய அறிவிப்பு!

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால், வாக்காளர் பட்டியலை வீட்டுக்கு வீடு சரிபார்க்கும் பணி, கடந்த மாதம் 21-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு வரும் 21-ந் தேதி வரை நடைபெறும். வாக்காளர்கள் தங்கள் விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மற்றும் புதிய வாக்காளர்களை இணைக்க விரும்பினால், அவரவர் வீட்டிற்கு வரும் அலுவலர்கள் மூலமாக செய்துக் கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.