ஆதார் கட்டணம் அக்.1 முதல் உயர்கிறது
ஆதாரில் தகவல்களை மாற்றுவதற்கான கட்டணம் அக்.1 முதல் உயர்கிறது. ஆதாரில் புகைப்படத்தை மாற்ற கட்டணம் ₹100ல் இருந்து ₹125-ஆகவும், மற்ற தகவல்களை மாற்றுவதற்கான கட்டணம் ₹50ல் இருந்து ₹75-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக ஆதாருக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது
*15 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிப்பு
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிக்கும் பணி தபால் துறை மூலம் மேற்கொள்ள ஏற்பாடு. செய்யப்பட்டுள்ளது. 15 லட்சம் மாணவர்களுக்கு இந்த புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது.