ரூ 500க்கு பதில் ரூ.1,100 வந்ததால் ஏடிஎம்மில் குவிந்த மக்கள்
உத்தரபிரதேசம், மால்புரா பகுதியில் ஏடிஎம்மில் 500 ரூபாய் எடுக்க முயன்றவருக்கு ரூ. 1,100 பணம் வெளி வந்ததால், பணத்தை எடுக்க ATM முன்பு மக்கள் கூட்டம் குவிந்தது. சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் அந்த ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து அதிக அளவிலான பணத்தை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இந்த தவறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது
அடுத்த ஆண்டு முதல் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா?
2026-ஆம் ஆண்டுக்குள் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறும் யூடியூப் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக வைரலாகி வரும் நிலையில், இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஜூன் 2 ஆம் தேதி ‘கேபிடல் டிவி’ என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 நிமிடம் உள்ள இந்த வீடியோவை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர். […]
500 நோட்டுகள் செல்லாதா? FACT CHECK-ல் மறுப்பு
நாட்டில் புழக்கத்தில் உள்ள அதிகமதிப்பு கொண்ட ரூபாய் நோட்டாக ≈500 உள்ளது. இந்நிலையில், 2026 மார்ச் முதல் 500 நோட்டுகள் செல்லாது என்று சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியை மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 2500 நோட்டுகள்மதிப்பிழப்பு செய்யப்பட மாட்டாது, சட்டப்படி தொடர்ந்து செல்லும், ஆதலால் பொய் செய்தியை நம்ப வேண்டாம் என்று அது தெரிவித்துள்ளது