ரூ.2,000 நோட்டுகளை அஞ்சலங்கள் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு

டெல்லி: ரூ.2,000 நோட்டுகளை அஞ்சலங்கள் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19 முதல் தற்போது வரை 97% அளவிலான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்பியுள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சென்னை: ரூ.2000 தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது

2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், அந்த அவகாசன் இன்றுடன் முடிவடைகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கடந்த மே மாதம் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.