ஆம்புலன்ஸில் வந்து தேர்வெழுதிய மாணவர் சாதனை
ராமநாதபுரத்தில், எலும்பு முறிவு ஏற்பட்டு ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதியபிளஸ் 2 மாணவர் சமய ரித்திக் சாதனைசென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வரும் நிலையில்,600-க்கு 565 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்
பிளஸ் டூ தேர்வில் ஐந்து பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்து சாதனை படைத்த மாணவி சாதனா
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதில் சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியில் உள்ள சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி சாதனா 597 மதிப்பெண்கள் பெற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார்ஆங்கிலம் உயிரியல் வேதியல் இயற்பியல் கணிதம் ஆகிய ஐந்து பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் தமிழில் 97 மதிப்பெண்களும் பெற்று 597 மதிப்பெண்கள் பெற்று மாணவி சாதனா சாதனை படித்துள்ளார் செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் மாணவியாக அவர் தேர்வாகியுள்ளார்சாதனை படைத்த மாணவி […]
அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளி தேர்ச்சி விகிதம் அதிகம்
அரசுப் பள்ளிகளில் 91.94% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71%, தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.88% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், இருபாலர் படிக்கும் பள்ளிகளில் 95.30% மாணவர்களும், பெண்கள் படிக்கும் பள்ளிகளில் 96.50%, ஆண்கள் பள்ளிகளில் 90.14% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் – மண்டலவாரியாக தேர்ச்சி சதவீதம்

திருவனந்தபுரம் – 99.91% விஜயவாடா – 99.04% சென்னை – 98.47 % பெங்களூர் – 96.95% மாணவிகள் – 91.52 %மாணவர்கள் – 85.12%மாற்று பாலினத்தவர் – 50% மொத்தம் – 87.98% அனைத்துப் பாடங்களிலும் மாணவர்களை விட மாணவிகள் 6.40% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்
598 மதிப்பெண் பெற்று தாம்பரம் மாணவி சாதனை

மதிப்பெண்கள் வாழ்கையின் முடிவல்ல. சாதிக்க பல துறைகள் உள்ளதால் மாணவர்கள் தவறான முடிவுக்கு போக கூடாது. தாம்பரத்தில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 598 எடுத்து சாதித்த மானவி பேட்டி. சென்னை அடுத்த கிழக்கு தாம்பரம் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில் படித்த மாணவி தோஷிதா லட்சுமி பண்ணிரெண்டாம் வகுப்பில் ப்ரென்ச் பாடத்தை முதல் பாடமாக எடுத்து படித்த நிலையில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 600 க்கு 598 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு கல்வி […]
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற சென்னைச் சேர்ந்த திருநங்கை நிவேதா மற்றும் நாங்குநேரியில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை ஆகிய இருவரும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ.குமரகுருபரர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, திருநெல்வேவி மாவட்ட கல்வி அலுவலர் முத்துசாமி ஆகியோர் உள்ளனர்.
செம்பாக்கம் சீயோன் பள்ளி மாணவி சாதனை 4 பாடத்தில் சதம்

தாம்பரம் அடுத்த செம்பாக்கம் சியோன் பள்ளி மாணவி அபர்ணா வணிகவியல், வணிக கணிதம் பாடப்பிரிவில் 600 க்கு 596 மதிப்பெண் பெற்றுள்ளார். இதில் 4 பாடப்பிரிவில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ்-99ஆங்கிலம்-97வணிகவியல் -100வணிக கணிதம்-100பொருளியல்- 100கண்க்கு பதிவியல்-100மதிப்பெண் பெற்றுள்ள நிலையில் அப்பள்ளி சார்பில் ஆசிரியர்களிடம் ஆசி பெற்றார்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து

“என் தம்பி, தங்கைகள் அனைவரும் அனைத்து தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர் கொண்டு வெற்றி பெற்று, விரும்பிய துறையில் உச்சம் தொட வாழ்த்து”
வேலூர்: +2 பொதுத்தேர்வு பணியில் சுணக்கமாக இருந்ததாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசப்பிரபா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
+2 தேர்வு இன்று முதல் ஹால் டிக்கெட்

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. மாணவ, மாணவிகளின் ஹால் டிக்கெட்டுகளை பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.