மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர்:

திருவாரூர்: வீட்டில் மின்சாரம் இன்றி அரசுப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பில் 492/500 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2வது இடத்தை பிடித்த மாணவி துர்காதேவி வீட்டிற்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவி நன்றி. 12ம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்று மருத்துவராவதே தனது லட்சியம் எனவும் மாணவி துர்காதேவி தெரிவித்துள்ளார்.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஹால் டிக்கெட்டை வரும் 15ம் தேதி முதல்dge.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவிப்பு. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கானத் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை 15.03.2024 அன்று பிற்பகல் முதல்www.dge.tn.gov.in στη இணையதளத்திலிருந்து அந்தந்தப் பள்ளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அரசு தேர்வுகள் இயக்ககம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்:

விருப்ப பாடத்திற்கான மதிப்பெண் இனி தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தகவல். விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் 600 மதிப்பெண் என்ற நடைமுறை அமல். வழக்கம்போல் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்களை மட்டும் எழுதக்கூடிய மாணவர்களும் எழுதலாம். நடப்பு ஆண்டு வரை 4ஆவதாக இடம் பெறக்கூடிய விருப்ப பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் […]