இந்தியா வந்த மெஸ்ஸிக்கு கிடைத்த ரூ 89 கோடி
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அர்ஜெண்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி வழங்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. கடந்த 13-ம் தேதி கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் அவர் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்