கூட்டணி நெருக்கடி.. மா.செக்கள் கூட்டத்தை கூட்டும் பிரேமலதா!

ஜூன் 11 – 14 வரை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் 2026 தேர்தல் கூட்டணி, சார்பு அணி நிர்வாகிகள், பூத் ஏஜெண்டுகள் தேர்வு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாம். NDA கூட்டணியில் இணைய தேமுதிகவுக்கு பாஜக தூது அனுப்பியதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.