இந்து முன்னணி மாநாட்டில் அறுபடை வீடுகள் காட்சி .

மதுரை பாண்டி கோயில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ல் நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி அறுபடை வீடுகளை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று திறந்து வைத்தார்.இதனை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஆறு கோடி வீடுகளில் மூலவர் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது