குற்றால சீசன்தொடங்கியது

குற்றாலத்தில் இதமான காற்றுடன் ,கருமேகங்கள் சூழ்ந்து பனிபடர்ந்து காணப்படுகிறது. வானுயர்ந்த மரங்களை மூடுபனி தழுவி படர்ந்திருப்பதால் இலைகள் வெண்மையாக காட்சியளிக்கின்றன. ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் மட்டும் தண்ணீர் விழத் தொடங்கி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவில் முன்கூட்டியே சீசன் தொடங்கிவிட்டதால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் 10 நாட்களுக்கும் மேல் உள்ள நிலையில் இன்று முதல் கூட்டம் அலைமோதத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.