திருச்செந்தூர் ராஜகோபுரத்திற்கு தங்க குடத்தால் அபிஷேகம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று அதிகாலை 6 மணி அளவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது மச்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.ராஜகோபுரம் கலசங்கள், மூலவர், வள்ளி, தெய்வானை கலசங்களுக்கு தந்திரி மற்றும் போத்திகளும், சுவாமி சண்முகர் மற்றும் பரிவாரமூர்த்தி கலசங்களுக்கு சிவாச்சாரியார்களும், பெருமாள் கலசங்களுக்கு பட்டாச்சாரியார்களும் புனித நீரால் அபிஷேகம் செய்தனர். இதில் ராஜகோபுரத்துக்கு மட்டும் தங்க குடத்தில் புனித நீர் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் 20 பெரிய ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது […]