திமுக மீது உதயநிதி அதிருப்தி.. ஆர்.பி. உதயகுமார் தாக்கு

உதயநிதி ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். திமுக துணை பொதுச் செயலாளர்பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உதயநிதி இருந்ததாகவும், ஆனால் அப்பதவி அளிக்கப்படாததால் அவர் அதிருப்தியில் உள்ளார் என்றும் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். குடும்பத்தில் நிலவும் அதிருப்தியை மறைக்கவே, தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஸ்டாலின் பேசுவதாகவும் சாடியுள்ளார்.