டிரம்புடன் பேச தயார் -மோடி அறிவிப்பு
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பேச தயாராக இருப்பதாக தெரிவித்தார்.அமெரிக்காவும் இந்தியாவும் இயற்கையான கூட்டாளிகள் என்று அவர் கூறினார் .மோடியுடன் பேச தயாராக இருப்பதாக ட்ரம்பும் அறிவித்தார்
ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: ஸ்டாலின் அறிவிப்பு
தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து இன்று சென்னை திரும்பிய ஸ்டாலின் இதனை தெரிவித்தார்
உக்ரைன் தலைநகர் மீது 800 டிரோன் ஏவி ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா 800 ட்ரோன்களை ஏவியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உக்ரைன் அரசு தலைமை அலுவலக கட்டிடத்தின் மேல்தள பகுதியில் தீப்பிடித்து, புகை எழுந்தது. இதை சர்வதேச ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதல் நேற்று நடந்துள்ளது
மோடி சிறந்த பிரதமர் – டிரம்ப் பாராட்டு
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது : மோடி சிறந்த பிரதமர். ஆனால் அவர் இப்போது செய்வது தான் பிடிக்கவில்லை . அதற்காத இந்தியா – பாசிஸ்தான் உறவில் மாற்றம் வராது. என்றார்.
தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் – முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கான பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் ஜெர்மனியில் மேற்கொண்ட பயணத்தில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், இங்கிலாந்தில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஜெர்மனியில் ரூ.7,020 கோடியும், இங்கிலாந்தில் ரூ.8,496 கோடியும் என மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க வரி பாதிப்பை ஜி.எஸ். டி. சலுகை சரி செய்யுமா?
பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா மீது அமெரிக்க விதித்துள்ள 50 சதவீத வரி நீண்ட காலம் நீடிக்காது என நினைக்கிறேன். இந்தியா மீது அதிக வரி விதிப்பது எதிர்பார்த்த பலனை தராது என்பதை அமெரிக்கா உணரத் தொடங்கியுள்ளது. உள்நாட்டில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதுநாட்டில் நுகர்வை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால் ஏற்படும் ஏற்றுமதி இழப்பை, உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பு ஈடுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான […]
மணிப்பூரில் அமைதி ஏற்பட ஒப்பந்தம்
மணிப்பூரில் மைதேயி, குகி குழுக்கள் மற்றும் மத்திய அரசு இடையே சுமுக உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையை திறக்க குகி நிர்வாகக் குழு ஒப்புக் கொண்டுள்ளது. அந்த மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மைதேயி, குகி சமுதாயத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து 258 பேர் உயிரிழந்தனர்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம்.. புதின் – ஜி ஜின்பிங் உரையாடல்
இதுகுறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் பேசிக்கொண்டது வைரலாகி வருகிறது. சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் இராணுவ அணிவகுப்புக்கு நடந்து செல்லும்போது இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடல் மைக் திடீரென ஆன் ஆனதால் கசிந்தது. அவர்கள் பேசியதாவது, ஜி ஜின்பிங்: கடந்த காலத்தில், மக்கள் 70 வயதைத் தாண்டி வாழ்வது அரிது என்று கூறினோம். ஆனால் இன்று, உங்கள் 70 களில் கூட, (நீங்கள்) இன்னும் ஒரு குழந்தையாகவே இருக்கிறீர்கள். […]
ஏர் இந்தியா கை மாறுமா?
ஏர் இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு சர்வதேச மற்றும் உள்நாட்டு வழித்தடங்களில் சுமார் 20% குறைந்துள்ளன. கடந்த வாரம் நடந்த அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமான முன்பதிவு குறைந்துள்ளது.இந்த நிலையில் ஏர் இந்தியா பணத்தை அதானி நிறுவனம் வாங்க போவதாக வதந்தி பரவி வருகிறது
ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் பரபரப்பு
அகமதாபாத்தில் இருந்து ஏர் -இந்தியா விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தின் மீது பறவை மோதியது. எனினும் விமானம் புனேயில் பத்திரமாகதரையிறக்கப்பட்டது. பின்னர் நடந்த சோதனையில் விமானத்தின் மீது பறவை மோதியது உறுதி செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்து நேராததால் பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தை அடுத்து புனேயில் இருந்து டெல்லி திரும்ப வேண்டிய அந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில், “புனே சென்ற […]